தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடம் மாவட்டத்தில் உள்ள பத்ராசலம் நகரில் கோதாண்டராமர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு அருகே 2 மாடி கட்டிடம் அமைந்திருந்தது. அதன் உரிமையாளர் சீனிவாசராவ் என்பவர் ஒரு அறக்கட்டளை பெயரில் பணம் வசூல் செய்து ஏற்கனவே இருந்த 2 மாடி கட்டிடத்தின் மீது மேலும் 4 மாடி கட்டி, 6 மாடி கட்டிடமாக உயர்த்த திட்டமிட்டுள்ளார். அதன்படி கட்டுமான தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தி வேலையையும் துவங்கி உள்ளார். இந்த கட்டுமானப் பணியில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

பழைய கட்டிடத்தின் மீதே எந்தவொரு அனுமதியும் பெறாமல் 4 மாடிகள் கூடுதலாக கட்டப்படுவது குறித்து அப்பகுதி மக்கள் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் 2 மாடி கட்டிடத்தின் மீது மேலும் 4 மாடிகள் கட்டி எழுப்பப்பட்டது. ஆனால் பழைய கட்டடம் என்பதால் புதிய கட்டுமானப் பணியால் அஸ்திவாரம் மேலும் வலுவிழந்து சரசரவென சரிந்து விழுந்து தரைமட்டமானது. இதில் கட்டுமானத் தொழிலாளர்கள் 7 பேர் சிக்கிக் கொண்டனர். கட்டிடம் இடிந்து விழுந்த போது அதனுள் வேலையில் இருந்த தொழிலாளர்கள் கத்தி ஓலமிடும் சப்தம் அங்கிருந்தவர்கள் நெஞ்சத்தை உலுக்கியது.
இதையும் படிங்க: வெறுப்பு பற்றி நமக்கு பாடம் எடுக்கிறார் யோகி ஆதித்யநாத்.. இது அவல நகைச்சுவை.. மு.க.ஸ்டாலின் மரண கலாய்.!!

மேலும் கட்டிடத்தின் அருகிலேயே ஒரு கோயிலும் கட்டப்பட்டு வருகிறது. சுற்றிலும் வீடுகள் நிறைந்த பகுதியில் இந்த கட்டிடம் இடிந்து விழுந்தது, அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்த போலீஸார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து, மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் 7 தொழிலாளர்களின் சடலங்களை மீட்டனர். இடிபாடுகளில் மேலும் 4 பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

தகவல் அறிந்த அதிகாரிகள் இடிபாடுகளை அகற்றி அனைவரையும் வெளியேற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். தரம் இல்லாத கட்டுமானத்தால் அனைத்து தளங்களும் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த 6 மாடி கட்டிடம் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு வருவதாக அதிகாரிக்கு புகார்களும் சென்றன. கட்டுமானம் தொடர்பான தகவல்களைப் பெற்ற பி.ஓ. ராகுல் கட்டிடத்தை இடிக்க பஞ்சாயத்து ராஜ் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இருப்பினும், பஞ்சாயத்து ராஜ் அதிகாரிகள் திட்ட அலுவலரின் உத்தரவை பின்பற்றாததால் இந்த விபத்து ஏற்பட்டதாகத் கூறப்படுகிறது.

தனது கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் குறித்து மக்கள் புகார் கூறுவதைக் கண்ட கட்டிட உரிமையாளர் சீனிவாச ராவ், அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்தக் கட்டிடம் மட்டுமல்ல, இன்னும் பல கட்டிடங்கள் நகரில் விதிமுறைகளை மீறி கட்டப்படுவதாக தெரிவித்துள்ளார். கட்டுமானத்தில் இருந்த தனது கட்டிடம் இடிந்ததை அறிந்த கட்டிடத்தின் உரிமையாளர் ஸ்ரீனிவாச ராவ் ஓடிவிட்டார். இந்த விபத்தில் எத்தனை பேர் இறந்தார்கள்? இடிபாடுகளுக்குள் எத்தனை பேர் சிக்கியிருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரியாத நிலையில் அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: “பொம்பள பொறுக்கி.. டேய்..” ... கோவை விமான நிலையத்தில் சாபக் கச்சேரி... ஆவேசமான இன்ஸ்டா காதலி...!