குஜராத்தின் சுரேந்திரநகர்-லக்தர் நெடுஞ்சாலையில், ஜமார் மற்றும் டெடாத்ரா கிராமங்களுக்கு இடையே விபத்து ஏற்பட்டது. ஸ்விஃப்ட் டிசையர் மற்றும் ஒரு டாடா ஹாரியர் கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் சக்தியால் ஸ்விஃப்ட் டிசையர் சாலையை விட்டு தூக்கி வீசப்பட்டதில், தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.
இந்த சம்பவத்தில் ஸ்விஃப்ட் டிசையரில் இருந்த 2 குழந்தைகள் உட்பட எட்டு பேரும் உயிரிழந்தனர். தீயின் தீவிரத்தால் கார் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மறுபுறம் மோதிய டாடா ஹாரியர் காரில் 3 பேர் பயணித்ததாகவும், அவர்கள் அனைவரும் காயத்துடன் சி.யு.ஷா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்விஃப்ட் டிசையரில் பயணம் செய்த பாவ்நகரைச் சேர்ந்த பிரதீபால் சிங் ஜகதீஷ் சிங் சுதாசமா ( 35), லக்தாரில் வசிக்கும் மீனாபா வீரேந்திர சிங், கைலாஸ்பா ஜகதீஷ் சிங் சுதாசமா (55), ராஜஸ்ரீபா நரேந்திர சிங் ராணா (47), திவ்யபா ஹர்தேவ் சிங் ஜடேஜா (55), பாவ்நகரில் வசிக்கும் திவ்யஸ்ரீபா பிரதிபால் சிங் சுதாசமா, ரிகேபா பிரதிபால் சிங் சுதாசமா உள்ளிட்டோர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: ஆட்டோ பார்க்கிங் காரால் நேர்ந்த கொடூரம்... உயிருக்கு போராடும் கார் உரிமையாளர் - நடந்தது என்ன?
விபத்தைத் தொடர்ந்து, அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு வந்ததால், சுரேந்திரநகர்-லக்தார் நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிய விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நெஞ்சே பதறுதே... லாரி மோதி அப்பளம் போல் நொறுங்கிய கார் - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி...!