திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் UIDAI தலைவர் நீல்காந்த் மிஸ்ரா இந்த உதய் ’மாஸ்காட்’ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். ஆதார் சேவைகளைப் பற்றிய தொழில்நுட்ப ரீதியான அல்லது நடைமுறை சார்ந்த விவரங்களை சிக்கலாக உணரும் பொதுமக்களுக்கு இது ஒரு எளிய துணையாக செயல்படும் என UIDAI தெரிவித்துள்ளது.
உதய் என்ற இந்த சின்னம் ஆதார் புதுப்பித்தல், அங்கீகாரம், ஆஃப்லைன் சரிபார்ப்பு, தகவல்களை தேர்ந்தெடுத்து பகிர்தல், புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்ளல் மற்றும் ஆதாரை பொறுப்புடன் பயன்படுத்துதல் போன்ற பல்வேறு சேவைகளை விளக்க உதவும். இதன் மூலம் டிஜிட்டல் அடையாள அமைப்பான ஆதாரை மக்கள் இன்னும் நெருக்கமாக உணர்வதோடு, சரியான முறையில் பயன்படுத்தவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாஸ்காட்டின் வடிவமைப்பு மற்றும் பெயர் தேர்வு முற்றிலும் பொதுமக்கள் பங்கேற்புடன் நடத்தப்பட்ட தேசிய போட்டி மூலம் முடிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. MyGov தளத்தில் நடத்தப்பட்ட இந்த போட்டிக்கு நாடு முழுவதிலிருந்து 875-க்கும் மேற்பட்ட படைப்புகள் வந்தன. மாணவர்கள், தொழில் வல்லுநர்கள், வடிவமைப்பாளர்கள் என பலதரப்பட்டோர் இதில் கலந்துகொண்டனர். பெயர் தேர்வில் போபாலைச் சேர்ந்த ரியா ஜெயின் முதலிடம் பெற்றார்.
இதையும் படிங்க: முக்கிய அறிவிப்பு... உணவு பொட்டலங்களில் VEG, NON VEG குறியீடு கட்டாயம்... கறார் காட்டும் அதிகாரிகள்...!
இந்த திறந்த போட்டி முறை ஆதாரின் அடிப்படைக் கோட்பாடான "பங்கேற்பு நம்பிக்கையை உருவாக்கும்" என்பதை மீண்டும் உறுதிப்படுத்துவதாக UIDAI தலைமை செயல் அதிகாரி புவனேஷ் குமார் கூறினார். இந்தியாவில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஆதாரை பயன்படுத்தி வரும் நிலையில், தகவல் தொடர்பு இன்னும் எளிமையாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும், தொடர்புபடுத்தக்கூடியதாகவும் மாற்றுவதே உதய் அறிமுகத்தின் முக்கிய நோக்கம். இனி வரும் டிஜிட்டல் பிரசாரங்கள், விழிப்புணர்வு இயக்கங்கள் மற்றும் பொது தொடர்பு பொருள்களில் உதய் பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஊழல் ஊற்று திமுக... பணக்கட்டுகள் எண்ணிய உடன்பிறப்புகள் சிறைக்கம்பி எண்ணுவார்கள்... நயினார் உறுதி...!