இறுதி முடிவெடுக்க முடியாமல் குழப்பத்தில் உள்ள செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் செல்போனில் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விரைவில் நடிகர் விஜய் உடைய கட்சியான தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது. ஏற்கனவே செங்கோட்டையன் இரு தினங்களுக்கு முன்பு விஜயை சந்தித்து பேசிவிட்டதாகவும் வரக்கூடிய 27ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் விஜய் கட்சியிலே செங்கோட்டையன் இணைய போகிறார் என்ற தகவலும் கிடைத்திருக்கின்றது.
அதிமுக ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்று முன்மொழிந்து, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சிக்குள் இணைத்து ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதன் காரணமாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையனின் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: தவெக ’காட்பாதர்’ ஆக மாறும் செங்கோட்டையன் - விஜய் கொடுக்கப்போகும் முக்கிய பதவி? - இபிஎஸ் தலையில் இறங்கியது இடி...!
இதனைத் தொடர்ந்து மதுரையில் நடைபெற்ற தேவர் குரு பூஜை நிகழ்வில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துடன் செங்கோட்டையன் கலந்து கொண்டார். இதனால் அதிருப்தியின் உச்சத்திற்கே சென்ற எடப்பாடி பழனிசாமி கட்சியில் இருந்து செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 2000 பேரை நீக்கி உத்தரவிட்டார்.
தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைக்க போராடுவேன். நீதிமன்றத்தை நாட போகிறேன் என்றெல்லாம் செங்கோட்டையன் தெரிவித்து வந்த நிலையில், நாளை மறுதினம் தமிழக வெற்றி கழகத்தில் இணைய இருப்பதாகவும் அவருக்கு முக்கியமான பொறுப்பு வழங்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்காக, ஆதவ் அர்ஜூனா, சில தினங்கள் முன் செங்கோட்டையனை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. வரும் 27.ம் தேதியான நாளை மறுநாள் விஜய் முன்னிலையில் செங்கோட்டையனை கட்சியில் இணைக்க தவெக தயாராக இருப்பதாகவும், ஆனால் இறுதி முடிவு எடுக்க முடியாமல் செங்கோட்டையன் குழப்பத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனால், இரு தினங்களாக முக்கிய நபர்களை தவிர, வழக்கமாக தன்னை சந்திக்க வரும் ஆதரவாளர்கள் மற்றும் தொகுதி நபர்களின் சந்திப்பை அவர் தவிர்த்துள்ளார். கோபி அருகே குள்ளம்பாளையம் இல்லத்தில் உள்ள அவரை சந்திக்க வருபவர்களும் திருப்பி அனுப்பப்பட்டனர்.
தனது முக்கிய ஆதரவாளர்களிடம் செங்கோட்டையன் செல்போன் மூலம் ஆலோசித்து வருகிறாராம். இதனையடுத்து, இன்று இரவு செங்கோட்டையன் சென்னை செல்கிறார். அவர் எடுக்கும் இறுதி முடிவின் அடிப்படையில் நாளை மறுநாள் தவெக.வில் இணைகிறாரா.? என்பது தெரிய வரும்.
இதையும் படிங்க: ஜெ. மாதிரி வருமா? பணம் இருந்தா தான் இப்பலாம் அதிமுகவில் பதவி... உடைத்து பேசிய சத்யபாமா...!