தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சிகளில் ஒப்பந்தங்கள் வழங்கப்படுவது, பொதுவாக சாலைப்பணிகள், கட்டட நிர்மாணம், கழிவு மேலாண்மை, மற்றும் பொது உள்கட்டமைப்பு தொடர்பான திட்டங்களுக்கு அரசு நிதியைப் பயன்படுத்துவதை உள்ளடக்கியது. இந்த ஒப்பந்தங்கள் பொதுவாக டெண்டர் முறையில் வழங்கப்படுகின்றன.
மேலும் இந்த செயல்முறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மை இருக்க வேண்டும் என்பது எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளில், சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் ஒப்பந்தங்கள் வழங்குவதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்தக் குற்றச்சாட்டுகள் பெரும்பாலும் ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு முறையற்ற முறைகளைப் பயன்படுத்துதல், பொது நிதியை தவறாகப் பயன்படுத்துதல், மற்றும் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி ஒப்பந்தங்களைப் பெறுதல் போன்றவற்றை உள்ளடக்கியவை. இந்த நிலையில், சென்னை, கோவை மாநகராட்சிகளில் ஒப்பந்தங்கள் வழங்கியதில் 98.25 கோடி முறைகேடு நடந்ததாக கூறி லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பான வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் பெயர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: “ஒருநாள் இப்படியும் நடக்கலாம்” - சிரஞ்சீவியை வைத்து விஜய்க்கு பறந்த மெசெஜ்... தவெகவை தெறிக்கவிட்ட எஸ்.பி.வேலுமணி...!
வேலுமணிக்கு எதிராக ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதால் வழக்கு தொடர சபாநாயகர் அனுமதி அளித்துள்ளதாகவும் கூறி உள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை விளக்கத்தைக் கேட்ட நிலையில், வழக்கின் விசாரணையை செப்டம்பர் 12ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
இதையும் படிங்க: கொட்டி கிடக்கும் கல்லு கோபுரம் ஆகாது! விஜய்க்கு தலைக்கால் புரியல... Ex. அமைச்சர் செம்மலை விளாசல்..!