ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் மீண்டும் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஜம்மு செக்டாரில் உள்ள எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அக்னூர், பூஞ்ச், ராஜோரி உள்ளிட்ட பகுதிகளில் போர் நிறுத்த உடன்படிக்கையை பாகிஸ்தான் அத்துமீறியதாக தகவல் வெளியாகி உள்ளது. எல்லையை ஒட்டிய பல்வேறு பகுதிகளில் அத்துமீறல் நிகழ்ந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் பீரங்கிகள் மூலம் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்த இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அத்துமீறல் குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில் மீண்டும் எல்லை பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக வெளியாகி உள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: போர் நிறுத்த ஒப்பந்தம் எதிரொலி! அடுத்த நகர்வு என்ன? பிரதமர் மோடி அதிமுக்கிய ஆலோசனை!

கடந்த ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாகிஸ்தானை நம்பலாமா என்று தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ஒரு கேள்வியை முன் வைத்திருந்த நிலையில் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக வெளியாகி உள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் ஸ்ரீ நகரின் பல்வேறு இடங்களிலும் வெடிப்பு சத்தம் கேட்டதை ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா உறுதி செய்தார். போர் நிறுத்த ஒப்பந்தம் என்ன ஆனது என தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் அதிருப்தியை தெரிவித்துள்ளார் உமர் அப்துல்லா.

இதையும் படிங்க: 2 நாட்களுக்கு முன்பு நிறுத்தியிருந்தால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கும்.. காஷ்மீர் முதல்வர் வருத்தம்..!