நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் பகல்காம் தாக்குதல் தொடர்பாகவும் ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாகவும் விவாதிக்க கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
பகல் காம் தாக்குதல், ராணுவ தாக்குதல் தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கப்படும் என்று மத்திய அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கமளித்தார்.
அப்போது காங்கிரஸ் கட்சி மீது சரமாரி குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். தீவிரவாத தாக்குதல்களை காங்கிரஸ் அரசு அமைதியாக பார்த்துக் கொண்டிருந்ததாக குற்றம் சாட்டியிருந்தார்.
இதையும் படிங்க: #BREAKING: பகல்காம் தாக்குதலுக்கு பழி தீர்த்தோம்.. மக்களவையில் அமித் ஷா அனல் பறக்கும் பேச்சு..!
தீவிரவாத பிரச்சனையை நரேந்திர மோடியின் அரசு அமைதியாக வேடிக்கை பார்க்காது என்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நமக்கு சொந்தமானது தான் எனவும் தெரிவித்தார்.

தீவிரவாத பிரச்சனையை காங்கிரஸ் அரசு உதாசீனப்படுத்தியதாக குற்றம் சாட்டிய அவர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சர்ஜிகள் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறினார்.
பாகிஸ்தானை சேர்ந்த குடிமக்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தாக்குதல் நடத்தப்பட்டது என்று விளக்கம் அளித்த அவர், இந்த முறை பாகிஸ்தானுக்குள் நூறு கிலோமீட்டர் உள்ளே சென்ற தாக்குதல் நடத்தி உள்ளோம் என தெரிவித்தார்
வேறு வழி எதுவும் இல்லை என்ற நிலைக்கேற்ப பாகிஸ்தானை சரணடைய வைத்தோம் என்று பெருமிதம் தெரிவித்த அமித்ஷா, பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பு முற்றிலும் தகர்க்கப்பட்டது என்றும் தீவிரவாத பிரச்சனையை மன்மோகன் சிங் மென்மையான போக்குடன் அணுகினார் எனவும் கூறினார்.
பாகிஸ்தானில் விமானப்படை தளங்களை குறிவைத்து தற்போது இந்திய ராணுவ வீரர்கள் அழித்துள்ளதாகவும், ஜூலை 22 ஆம் தேதி தீவிரவாதிகளை கண்டுபிடித்து சுற்றி வளைத்ததாகவும் சுலைமான் ஷா, அபூஹம்சா, யாசிர் ஆகிய மூன்று பேர் சுட்டுக் கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிமுகவை கிள்ளுகீரையாக நினைக்கிறார் அமித்ஷா! திருமா டைரக்ட் அட்டாக்..!