நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் பகல்காம் தாக்குதல் தொடர்பாகவும் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாகவும் விவாதிக்க கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கமளித்தார். அப்போது, ஆப்ரேஷன் மகாதேவ் குறித்து அனைத்து விவரங்களையும் வழங்குவதாக அமித்ஷா கூறினார்.
ஜூலை 22ஆம் தேதி அன்று பகல் காம் தீவிரவாதிகளை சுற்றி வளைத்து சுட்டுக்கொன்றுள்ளதாக கூறினார். சுற்றுலாப் பயணிகளை கொலை செய்வதற்கு பயன்படுத்திய ரைஃபில்கள் மீட்கப்பட்டதாகவும், ரைஃபிலில் இருந்த குண்டுகளும் உயிரிழந்த அப்பாவிகளின் உடலில் இருந்து குண்டுகளும் ஒன்று தான் என்பது உறுதியாகி உள்ளது என தெரிவித்தார்.
இதையும் படிங்க: எல்லா தப்பையும் செஞ்சது நேரு தான்! காங்கிரசுக்கு அருகதையே இல்ல...அமித்ஷா கொந்தளிப்பு
ஆப்ரேஷன் மகாதேவ் குறித்து எதிர்க்கட்சிகள் அதிருப்தியில் உள்ளதாக தோன்றுகிறது என தெரிவித்த அவர் இந்தியாவுக்கு எதிராக யோசித்து கூட பார்க்க முடியாத அளவுக்கு பழிவாங்கல் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

நீங்கள் பாகிஸ்தானுடன் பேசிக் கொண்டிருக்கிறீர்களா என எதிர்கட்சியினரை பார்த்து அமித் ஷா கேள்வி எழுப்பினார். தீவிரவாதிகளின் உடல்களை ஸ்ரீ நகருக்கு கொண்டு வந்து அடையாளம் காணப்பட்டதாகவும், அதில் தான் பகல் காம் தீவிரவாதிகள் என உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.
பயங்கரவாதிகள் மூன்று பேரையும் இந்திய ராணுவம், சி ஆர் பி எப், ஜம்மு காஷ்மீர் காவல்துறை கூற்று நடவடிக்கையாக கொன்று உள்ளது என்றும் கூறிய அவர், பகல் காம் தாக்குதல் தொடர்பாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசாரணை நடத்தப்பட்டதாக கூறினார். மேலும் தீவிரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தில் கிடைத்த ஆயுதங்களையும் பறிமுதல் செய்ததாக கூறினார்.
முதலில் தீவிரவாதிகளுக்கு உணவளித்து அடைக்கலம் கொடுத்தவர்களை அடையாளம் கண்டதாகவும், கொல்லப்பட்ட மூன்று பயங்கரவாதிகளும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்தார். சாக்லேட்டுகள், தோட்டாக்கள் என அனைத்தும் பாகிஸ்தானில் இருந்து வந்தவை என்பதை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமித் ஷா தெரிவித்தார்.
இதையும் படிங்க: அமைதியா போக மன்மோகன் சிங் அரசு இல்ல.. இது மோடி சர்க்கார்! லோக்சபாவில் அமித் ஷா செய்த வெறித்தனம்..!