நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் பகல்காம் தாக்குதல் தொடர்பாகவும் ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாகவும் விவாதிக்க கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கமளித்தார்.அப்போது, காங்கிரஸ் கட்சியின் மீதும், மன்மோகன் சிங் அரசன் மீதும், நேரு மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
இந்தியாவுக்கு சொந்தமான 80% தண்ணீரை பாகிஸ்தானுக்கு நேரு வழங்கியதாக தெரிவித்தார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு உருவானதற்கு காரணம் நேருதான் என்றும் நேரு ஆட்சியில் செய்த தவறுகளை தற்போது சரி செய்து கொண்டிருக்கிறோம் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: அமைதியா போக மன்மோகன் சிங் அரசு இல்ல.. இது மோடி சர்க்கார்! லோக்சபாவில் அமித் ஷா செய்த வெறித்தனம்..!
இந்தியாவை ரத்தம் சிந்த வைத்த தீவிரவாதிகளை மோடி அரசு அழித்து வருகிறது என தெரிவித்த அமித்ஷா, 1971 போருக்கு பிறகு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரி காங்கிரஸ் கேட்டு இருக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை திரும்ப பெற இந்திரா காந்தியும் முயற்சிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

காங்கிரஸ் பிரதமர்களை போல் பிரதமர் மோடி அமைதியாக இருக்க மாட்டார் என திட்டவட்டமாக தெரிவித்த அமித்ஷா, சிம்லா ஒப்பந்தத்தின் போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து இந்திரா காந்தி பேசவில்லை என்றும் இந்தியா பிரிவினைக்கு காங்கிரஸ்தான் பொறுப்பு என்றும் குற்றம் சாட்டினார்.
38 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட பகுதியை சீனாவுக்கு கொடுத்தவர் நேரு எனவும் அக்ஷய் சின் என்ற பெரும்பகுதியை சீனாவுக்கு நீர் கொடுத்தார் என்றும் சீனா தொடர்பான விவகாரங்களை நேரு மென்மையான போக்குடன் அணுகியதாக விமர்சனம் செய்தார்.
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலுக்கான இடத்தை சீனாவுக்கு கொடுத்தவர் நேரு என பேசிய அமித்ஷா, இந்திரா காந்தியும் இதே நிலைப்பாட்டில் தொடர்ந்து செயல்பட்டு வந்தார் என்றும் எங்களை கேள்வி கேட்க காங்கிரஸுக்கு அருகதை இல்லை எனவும் கூறியுள்ளார்.
சீன விவகாரங்களில் நேரு கொண்டிருந்த பார்வையால் இந்தியாவுக்கு பேரிழப்பு ஏற்பட்டுவதாகவும் 2005 - 2011 வரையிலான தீவிரவாத தாக்குதல்கள் குறித்து காங்கிரஸ் எடுத்த நடவடிக்கை என்ன என்றும் கேள்வி எழுப்பினார்.
பாட்லா ஹவுஸ் தாக்குதல் தீவிரவாதிகளுக்காக கண்ணீர் சிந்தியவர் சோனியா காந்தி என கூறிய அவர், காங்கிரஸ் ஆட்சியின் போது தப்பி ஓடிய தீவிரவாதிகளின் பட்டியலை வெளியிட்டார். தாவுத் இப்ராஹிம், சலாவுதீன், பத்கல் ஆகியோர் காங்கிரஸ் ஆட்சியில் தப்பியவர்கள் எனக் கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை மக்களவையில் அமித் ஷா முன்வைத்த நிலையில் எதிர் கட்சிகள் கூச்சல் எழுப்பினர்.
இதையும் படிங்க: #BREAKING: பகல்காம் தாக்குதலுக்கு பழி தீர்த்தோம்.. மக்களவையில் அமித் ஷா அனல் பறக்கும் பேச்சு..!