பீகாரில் தற்போது முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்ற வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் பிஹாரில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதை எடுத்து வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகளை தலைமை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. எதிர்க்கட்சிகள் இந்த திருத்தத்தை தேசிய குடிமக்கள் பதிவேடு NRC உடன் தொடர்புபடுத்தி, சிறுபான்மையினர் மற்றும் புலம்பெயர்ந்தோரின் வாக்குரிமையை பறிக்கும் முயற்சியாகக் கருதுகின்றனர். வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்படுவது குறித்து கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் நீதிபதிகள் சுதான்ஷு துலியா, ஜோய்மாலியா பக்ஷி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை தேர்தல் ஆணையம் நடத்தி வரும் வாக்காளர் தீவிர திருத்தப் பணிகளுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. இந்த சரி பார்த்து பணியின் போது ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை ஆகியவற்றை உரிய ஆவணமாக கருத்தில் கொள்ளும்படி பரிந்துரை செய்தது.

இந்த நிலையில் வாக்காளர் திருத்தப்பட்டியலை தயார் செய்யும் பணியில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இது குறித்த விசாரணை உரிய முறையில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதிக்குள் நடத்தப்படும் என்றும் இறுதி வாக்காளர் திருத்தப்பட்டியல் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். இதனிடையே பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணியின் போது தேர்தல் ஆணைய அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று கள ஆய்வு நடத்தியது, வங்கதேசம், நேபாளம் மற்றும் மியான்மரைச் சேர்ந்த மக்கள் அதிக அளவில் வசித்து வருவதை அடையாளம் கண்டுள்ளனர். இந்த நிலையில், சட்டவிரோத குடியேறிகளின் பெயர்கள் சேர்க்கப்படாது என்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: குடுமிபிடி சண்டை! தேர்தல் ஆணையத்திற்கே சென்ற பாமக பஞ்சாயத்து.. இரு தரப்பும் பதவிக்கு போட்டா போட்டி..!
இதையும் படிங்க: அதிமுகவில் நிலவும் உட்கட்சி பிரச்சனை... விரைவாக விசாரணை... களத்தில் இறங்கப்போகும் தேர்தல் ஆணையம்!!