பாஜகவின் புதிய தேசிய செயல் தலைவராக நிதின் நபின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பீகார் மாநில அமைச்சரான நிதின் நபின் பாஜகவின் தேசிய செயல் தலைவராக தேர்வாகியுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பாஜக வெளியிட்டுள்ளது. பீகார் அரசில் இவர் சாலை கட்டுமானம், நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதி உள்ளிட்ட முக்கியத் துறைகளின் அமைச்சராகப் பொறுப்பு வகித்து வருகிறார். கட்சி அமைப்பிலும் அவர் முக்கியப் பங்களிப்பு செய்தவர்.
பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் (BJYM) தேசிய பொதுச் செயலாளராகவும், பீகார் மாநிலத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். மேலும், சிக்கிம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களுக்கான பாஜகவின் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டு, குறிப்பாக சத்தீஸ்கரில் கட்சியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றியவர்.
இதையும் படிங்க: வரலாற்று வெற்றி! பிரதமர் மோடி, நிதிஷ் குமார் மீதான நம்பிக்கையின் முத்திரை... ஜே. பி. நட்டா பெருமிதம்...!

இந்தத் தேசிய செயல் தலைவர் நியமனம் பாஜகவின் தேசிய அமைப்பில் பீகார் போன்ற முக்கிய மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்துவதாகவும், கட்சியின் உத்திகளை மேலும் திறம்பட செயல்படுத்துவதற்கான நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது. தற்போதைய பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா தலைமையிலான குழுவில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது பீகாரின் அரசியல் செல்வாக்கையும், நிதின் நவீனின் அமைப்புத் திறனையும் அங்கீகரிக்கும் விதமாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: முழு பூசணிக்காய சோத்துல மறைக்குறாரு… காலிப் பணியிட விவகாரத்தில் மா.சு.வை சூறையாடிய மாஜி அமைச்சர்…!
பாஜகவின் தேசிய அமைப்பில் தலைவருக்கு அடுத்த நிலையில் செயல் தலைவர் பொறுப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது கட்சியின் அன்றாட நிர்வாகம், உத்தி வகுத்தல் மற்றும் தேர்தல் தயாரிப்புகளில் முக்கிய பங்கு வகிக்கும். நிதின் நபினின் இந்த உயர்வு பாஜகவின் எதிர்கால அரசியல் நகர்வுகளில் பீகார் மாநிலத்தின் பங்களிப்பை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.