2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சென்னையின் வரலாற்றுப் புகழ்பெற்ற மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி மிக முக்கியமான போட்டியைக் கண்டது. கோயில்கள், பாரம்பரியம், பல்வேறு சமூகங்களின் கலவை மற்றும் நகர்ப்புற சவால்களைக் கொண்ட இந்தத் தொகுதி, பாரம்பரிய திராவிடக் கட்சிகள், பாஜக மற்றும் புதிய சக்திகளுக்கு இடையேயான நான்கு முனைப் போட்டியாக உருவெடுத்தது. தேர்தல் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற்றது.
திமுகவின் தற்போதைய எம்எல்ஏ தா. வேலு மீண்டும் போட்டியிட்டார். அவர் 2021 தேர்தலில் வெற்றி பெற்றவர் மற்றும் தொகுதியில் நீண்டகால அனுபவம் கொண்டவர். திமுக சார்பில் அவரது வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டபோது, கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். மயிலாப்பூர் தொகுதியில் திமுகவின் வெற்றிக்கு அவர் முக்கிய நம்பிக்கையாகக் கருதப்பட்டார்.

பாஜக சார்பில் முன்னாள் தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிட்டார். இது பாஜகவுக்கு உயர் பதவியில் இருந்த ஒரு முக்கிய தலைவரை நகர்ப்புறத் தொகுதியில் நிறுத்திய முக்கிய முடிவாகும். அதிமுக உடனான கூட்டணியின் ஒரு பகுதியாக பாஜக இந்தத் தொகுதியைப் பெற்றது. தமிழிசை சௌந்தரராஜன் பெண்கள் பிரதிநிதித்துவம், பாரம்பரிய மற்றும் வளர்ச்சி பிரச்சினைகளை முன்னிறுத்தி தீவிர பிரச்சாரம் செய்தார். இவரது வேட்பாளர் நிலை மயிலாப்பூரில் பெரும் கவனத்தை ஈர்த்தது.
இதையும் படிங்க: #TNElectionResults2026: பிகிலடிக்கும் விஜய்.. மெர்சல் காட்டும் தவெக... மக்கள் திமுக, அதிமுகவை ஓரங்கட்ட காரணம் இதுவா?
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பி. வெங்கடரமணன் போட்டியிட்டார். விஜய்யின் நெருங்கிய ஆதரவாளராக அறியப்படும் இவர், புதிய அரசியல் சக்தியின் பிரதிநிதியாகக் களமிறங்கினார். சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் வெங்கட்ரமணன் முன்னிலை பெற்று வருகிறார். 27 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை வெங்கட்ரமணன் பெற்றுள்ளார். பாஜக சார்பில் போட்டியிட்ட தமிழிசை பின்னடைவை சந்தித்தார். இந்த நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் வாக்கு என்னும் மையத்திலிருந்து வெளியேறி உள்ளார். நீண்ட நேரம் வாக்கு என்னும் மையத்தில் காத்திருந்த அவர், அப்செட் ஆகி அங்கிருந்து புறப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: #TNElectionResults2026..! தேர்தல் ரேசில் முந்தும் தவெக..! குஷியில் விஜய் குடும்பம்..!!