இந்திய தபால் துறை (Department of Posts) மற்றும் பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) இடையேயான புதிய ஒப்பந்தம், நாடு முழுவதும் உள்ள 1.65 லட்சத்திற்கும் மேற்பட்ட தபால் நிலையங்களை BSNL சிம் கார்டு விற்பனை மற்றும் மொபைல் ரீசார்ஜ் நிலைகளாக மாற்றுகிறது. இந்த ஒரு வருட ஒப்பந்தம் (MoU) கையெழுத்தான நிலையில், கிராமப்புறங்கள் மற்றும் தொலைதூர பகுதிகளில் டெலிகாம் சேவைகளை எளிதாக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் பரந்த தபால் நெட்வொர்க், கிராமங்கள் மற்றும் ஊர்களின் ஒவ்வொரு மூலையிலும் சென்றடையும் தன்மை கொண்டது. இந்த ஒப்பந்தத்தின்படி, தபால் நிலையங்கள் BSNL-ன் Points of Sale (PoS) ஆக செயல்படும். BSNL சிம் கார்டுகளை விற்கவும், ரீசார்ஜ் செய்யவும், புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கவும் இவை உதவும்.
இதையும் படிங்க: இந்த பகுதி மக்களே விட்டுடாதீங்க.. நாளை ஒரே ஒரு வார்டில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்..!!
BSNL சிம் பங்குகளை வழங்கி, தபால் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கும். மறுபுறம், தபால் துறை பாதுகாப்பான பரிவர்த்தனைகளை நிர்வகித்து, வாடிக்கையாளர் சேர்க்கையை கையாளும் என்று வெளியீடு கூறுகிறது. இந்த திட்டம், ஆசாம் மாநிலத்தில் நடத்தப்பட்ட வெற்றிகரமான பைலட் திட்டத்தின் அடிப்படையில் நாடு முழுவதும் விரிவாக்கப்படுகிறது.
அசாமில் சோதனை முயற்சி வெற்றி பெற்ற நிலையில் நாடு முழுமைக்கும் விரைவில் அமலுக்கு வர உள்ளது. இப்போது, இந்தியாவின் 1.65 லட்சம் தபால் நிலையங்கள் இந்த சேவைகளை வழங்கும், குறிப்பாக தொலைதூர கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு நகரங்களுக்கு பயணம் செய்யாமல் சேவைகளைப் பெற அனுமதிக்கும். "இந்த ஒத்துழைப்பு மூலம், BSNL சேவைகள் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் கிடைக்கும்.
கிராமப்புற மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் குடிமக்களுக்கு அவர்களது அருகிலுள்ள தபால் நிலையத்தில் மொபைல் சேவைகளை எளிதாக அணுகலாம்," என்று BSNL-ன் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரதான பொது மேலாளர் தீபக் கார்க் கூறினார். தபால் துறை பொது மேலாளர் மனிஷா பன்சால் படல், "இந்திய தபால் நெட்வொர்க்கின் நம்பகமான வலையமைப்புடன் BSNL-ன் டெலிகாம் சேவைகளை இணைத்து, அனைவருக்கும் குறைந்த செலவில் இணைப்பை உறுதி செய்யலாம்," என்று கூறினார்.

இந்த ஒப்பந்தம், டிஜிட்டல் இந்தியா, நிதி சேர்த்தல் மற்றும் சமூக-பொருளாதார வளர்ச்சி இலக்குகளை வலுப்படுத்தும். தொலைதூர பகுதிகளில் டிஜிட்டல் பிளவை நீக்கி, கிராமப்புற குடும்பங்களுக்கு மொபைல் சேவைகளை வழங்கும். மாதாந்திர ரீகன்சிலியேஷன் மற்றும் சைபர் பாதுகாப்பு தரங்களை கடுமையாக கடைப்பிடிப்பதன் மூலம், பரிவர்த்தனைகள் பாதுகாக்கப்படும். இந்த திட்டம் BSNL-ன் சந்தைப் பங்கை அதிகரிக்கும் அதோடு, அரசின் பொது சேவை ஒருங்கிணைப்பின் சிறந்த எடுத்துக்காட்டாக அமையும். விரைவில் நாடு முழுவதும் இது செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: நோவ்… ரோபோ அண்ணா! விட்டு போய்ட்டியே வரமாட்டியா? கதறும் உறவுகள்...!