நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத்தை கூட்ட வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நாடாளுமன்ற விவகாரங்களுக்கான கேபினெட் குழு பரிசீலிக்கும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அர்ஜூன் மேக்வால் தெரிவித்தார்.
பஹல்காம் தாக்குதல் தொடர்பாக கண்டனத் தீர்மானம் கொண்டுவர வேண்டும், பாதுகாப்பு படைகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கக் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தன.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி வலியுறுத்தினர். இந்நிலையில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அர்ஜூன் மேக்வால் டெல்லியில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இதையும் படிங்க: பொறுமையா போங்க, பேரழிவு ஏற்படும்..! இந்தியா, பாக்.-ஐ பதற்றத்தை தணிக்க ஐ.நா. வேண்டுகோள்..!
பஹல்காம் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக விவாதம், கண்டனத் தீர்மானம் கொண்டு வர சிறப்புக் கூட்டத்தொடரை கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை கூட்டுவது குறித்து நாடாளுமன்ற விவகாரத்துறைக்கான கேபினெட் குழு பரிசீலிக்கும், கூட்டத்தொடர் முடிவு செய்தபின் அதுகுறித்து முறைப்படி தெரிவிப்போம். சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பிஆர் அம்பேத்கர் புகைப்படத்தின் பாதியையும், முலாயம்சிங் யாதவ் புகைப்படத்தின் பாதியையும் இணைத்து வெளியிட்டது, அம்பேத்கரை அவமானப்படுத்துவது போலாகும். அம்பேத்கர் அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பி, தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்.
இந்த புகைப்படம் படம் தனக்கு தலித்துகளின் வாக்குகளைப் பெற்றுத் தரும் என அகிலேஷ் யாதவ் நினைத்திருந்தால், அது மாயை. சமாஜ்வாதி கட்சி காங்கிரஸின் கூட்டாளி இரு தேர்தலிலும் தோல்வி அடைந்தது நினைவிருக்கட்டும். இரண்டு தேர்தல்களில் தோல்விகளை உறுதி செய்தது என்றும் குறிப்பிட்டார்.

இதரபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது, ராஜீவ் காந்தி எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கடுமையாக எதிர்த்தார். அகிலேஷ் யாதவ் முதல்வராக இருந்தபோது, தலித் பிரிவைச் சேர்ந்த பொறியாளர்கள் ஏராளமானோர் உபியில் புறக்கப்பட்டனர். இடஒதுக்கீடு குறித்த மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தபோது அதை கிழித்து எறிந்ததும் சமாஜ்வாதி எம்.பி.தான். பஹல்காம் தாக்குதல் குறித்து இருநிலைப்பாட்டுடன் பேசக்கூறி காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளது அதனால்தான் சிலர் தேசத்துக்கு எதிராகவும், சிலர் தாக்குதலுக்கு பதிலடி தரவேண்டும் என்று பேசுகிறார்கள். இது முரணாக இருந்ததால்தான் காங்கிரஸ் கட்சி கண்டித்தது”
இவ்வாறு மேக்வால் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாகிஸ்தான் கணவரால் இந்திய பெண்ணுக்கு பிறந்த 9 குழந்தைகள்... குழப்பதில் அதிகாரிகள்..!