சென்னையில் நடைபெற்ற தனது வரவிருக்கும் 'தக் லைஃப்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது கமல்ஹாசன் கன்னட நடிகர் சிவராஜ்குமாரிடம் உரையாற்றினார். அப்போது தமிழ் மீதான தனது ஆழமான தொடர்பை வெளிப்படுத்திய அவர், "உயிரே உறவே தமிழே என்று கூறித் தொடங்கினார்.
\
தன்னுடன் மேடையைப் பகிர்ந்து கொண்டிருந்த சிவராஜ்குமாரைப் பார்த்து, “நடிகர் சிவராஜ்குமார் வேறொரு மாநிலத்தில் வசிக்கும் என் குடும்பம். உங்கள் மொழி தமிழிலிருந்து பிறந்தது. எனவே, நீங்கள் அந்த வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளீர்கள்” என்று குறிப்பிட்டார். கமல் ஹாசனின் இந்த கருத்து கர்நாடகாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, விஜயேந்திரா "கன்னடர்களிடம் உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று கோரினார். கர்நாடக பாஜக தலைவர் பி.ஒய்.விஜயேந்திராவும் தனது தாய் மொழியை பெருமைப்படுத்துவதற்காக கன்னடத்தை கமல் ஹாசன் அவமதித்து விட்டதாக கண்டித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தல்.. எம்.பி.யாகும் கமல்ஹாசன்.. குஷியில் மநீமவினர்.!
இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "கலைஞர்கள் ஒவ்வொரு மொழியையும் மதிக்கும் பண்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும். கன்னடம் உட்பட பல இந்திய மொழிகளில் நடித்த நடிகர் கமல்ஹாசன், கன்னடத்தை அவமதித்திருப்பது ஆணவத்தின் உச்சம். "கன்னடம் பல நூற்றாண்டுகளாக இந்தியா உட்பட உலகின் பல பகுதிகளில் ஒரு முக்கிய மொழியாக உள்ளது" என பதிவிட்டுள்ளார்.

தற்போது கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா கமல் ஹாசனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். “கன்னட மொழிக்கு நீண்ட வரலாறு உண்டு. பாவம் கமல்ஹாசனுக்கு அது தெரியாது” எனக்கூறியுள்ளார்.
இதையும் படிங்க: உள்நாட்டு பாதுகாப்பு திறன்களை மேம்படுத்த ஸ்மார்ட் மூவ்... AMCA திட்டத்திற்கு ராஜ்நாத் சிங் ஒப்புதல்!!