காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது. இந்த சூழலில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது.

இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனால் இருநாடுகளுக்கிடையே பதற்றமான சூழல் நிலவியது. 4 நாட்களுக்கு பின்னர் இரு நாடுகளும் போர் நிறுத்த முடிவுக்கு வந்தன. இந்த போரில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து அவர்களின் தாக்குதல்களை முறியடிக்க பெரிதும் பயன்பட்டது இந்தியாவின் மேம்படுத்தப்பட்ட ஆயுதங்களே. இந்த நிலையில் இந்தியாவின் முதல் ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானமான Advanced Medium Combat Aircraft (AMCA) திட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். தனியார் துறை கூட்டாளர்களுடன் இணைந்து இது செயல்படுத்தப்பட உள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் பயமுறுத்தும் கொரோனா.. முகக் கவசம் அணிவது கட்டாயம்.? ஹெல்த் மினிஸ்டர் முக்கிய அப்டேட்.!!

இந்தியாவின் "ஆத்மநிர்பர் பாரத்" (தன்னிறைவு இந்தியா) திட்டத்தின் கீழ் ஒரு முன்னெடுப்பாகும். AMCA விமானம் 25 டன் எடையுள்ள இரட்டை எஞ்சின் விமானம். மேலும் 6.5 டன் உள் எரிபொருள் திறன் கொண்ட இதில் 1,500 கிலோ பேலோட் சுமக்கும் திறன், உள் ஆயுத அறையில் நான்கு நீண்ட தூர air to air ஏவுகணைகள் வைக்கும் வசதிம் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் (AI) இயங்கும் எலக்ட்ரானிக் பைலட், நெட்சென்ட்ரிக் வார்பேர் சிஸ்டம், ரியல் டைம் கண்காணிப்பு வசதி ஆகியவை உள்ளது.

முன்னதாக சீனா, பாகிஸ்தானுக்கு J-35 ஸ்டெல்த் போர் விமானங்களை வழங்கலாம் என்ற செய்தி வெளியானது. இதுமட்டுமின்றி J-36 மற்றும் J-50 போன்ற 6-ஆம் தலைமுறை போர் விமான முன்மாதிரிகளை சீனா சோதித்து வருவதாக தெரிகிறது. இதனால் இந்தியா உஷரானது. DRDO இந்த விமானத்தை 2035க்குள் வழங்க உறுதியளித்துள்ளது. திட்டத்தின் ஆரம்ப செலவு ரூ.15,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரஷ்யா பயணம் ஏன் ரத்து செய்யப்பட்டது? அஜித் தோவல் குறித்து வெளியான முக்கிய தகவல்!!