பகல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக இன்று பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தலங்களை குறிவைத்து இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 17 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. ஒன்பது நிலைகளை குறி வைத்து தாக்கிய இந்த தாக்குதலில் தீவிரவாத அமைப்புகளின் தலைமையிடங்கள் தகர்க்கப்பட்டன.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இந்திய ராணுவத்தின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்ட நிலையில் மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. அதற்கு முன்னதாக பாதுகாப்பு ஆலோசகர், மதிய உள்துறை அமைச்சர் உள்ளிட்டோ பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்தினர்.
இதையும் படிங்க: தீவிரவாதிகளை துவம்சம் செய்த இந்தியா! பிரதமர் மோடி தலைமையில் கூடுகிறது அனைத்து கட்சி கூட்டம்...

இந்த நிலையில் நாளை காலை 11 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் கூடுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவின் தாக்குதலுக்கு காங்கிரஸ் கட்சி எந்தவித நிபந்தனையும் இல்லாமல் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளது. தாக்குதல் சம்பவம் தொடர்பாக முக்கிய ஆலோசனை நாளை நடைபெற உள்ள நிலையில் இன்று மாலை காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் மாலை 5 மணி அளவில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி வேணுகோபால், ஜெயராம் ரமேஷ் என தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தபோது பிகார் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி.. விளாசிய கார்கே!