விழுப்புரத்தில் சமீபத்தில் நடைபெற்ற மகளிர் பாதுகாப்பு மற்றும் அதிமுக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய சி.வி. சண்முகம், நடிகை நயன்தாரா மற்றும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மிகவும் தரம் தாழ்ந்த மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாகப் புகார் எழுந்தது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி, திரைத்துறையினர் மற்றும் பெண்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அன்று கூட்டத்தில் நான் பேசியபோது, ஒரு குறிப்பிட்ட விவகாரத்தைச் சுட்டிக்காட்ட முயன்றேன். அப்போது மற்றொரு நபரின் பெயரைக் கூறுவதற்குப் பதிலாக, நடிகையின் பெயரைத் தவறுதலாக மாற்றிச் சொல்லிவிட்டேன். அது திட்டமிட்டுச் சொல்லப்பட்ட கருத்து அல்ல என அவர் விளக்கமளித்தார்.
எனது பேச்சினால் நடிகையின் மனது புண்பட்டிருந்தால் அல்லது அவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்திருந்தால், அதற்காக நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். அந்த வார்த்தைகளை நான் திரும்பப் பெறுகிறேன் என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிடித்த சனி விட்டுவிட்டது.. அதிமுகவுக்கு இன்றுதான் தீபாவளி! ஓபிஎஸ்-ஐ கடுமையாக சாடிய சி.வி. சண்முகம்!

ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன் 'பெண்கள் மற்றும் இலவசத் திட்டங்கள்' குறித்துப் பேசி சர்ச்சையில் சிக்கியிருந்த சி.வி. சண்முகத்திற்கு, இந்தப் புதிய விவகாரம் பெரும் நெருக்கடியைக் கொடுத்தது. குறிப்பாக, தவெக மற்றும் திமுக தரப்பிலிருந்து இவருக்குக் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்ட சூழலில் இந்த வருத்தம் தெரிவிப்பு வெளியாகியுள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் ஏற்கனவே எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தேர்தலில் போட்டியில்லை! அதிமுக கூட்டணியில் நிபந்தனையற்ற ஆதரவை அறிவித்தார் டிடிவி தினகரன்!