டெல்லியில் காற்றுமாசு அதிகரித்து உள்ளது. இதனை கட்டுப்படுத்த செயற்கை மழை உள்ளிட்ட முயற்சிகளை கூட மேற்கொண்டு வருகிறது. கட்டுமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. பட்டாசு தயாரிக்கவும், பட்டாசுகளை வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டது. தற்போது பெட்ரோலுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கடுமையான காற்று மாசால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி இருக்கின்றனர். இது போன்ற சூழல் மக்களை பெரும் இன்னலுக்கு ஆளாக்கி இருக்கிறது. பொதுவாக காற்று தரக் குறியீடு 0- 50க்கு இடைப்பட்ட அளவு இருப்பது சுகாதாரமான சூழலுக்கான அறிகுறி. 51 இல் இருந்து 100க்கு இடைப்பட்ட அளவு திருப்திகரமானது.
அதில் 101 இருந்து 200 அளவானது மிதமானதாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதிலும் 201 இருந்து 300க்கும் இடையே இருந்தால் மோசமான காற்று தர குறியீடு என்று அறியப்படுகிறது. 301- 400 மிகவும் மோசமான காற்று மாசு குறியீடு. தலைநகர் டெல்லியை பொருத்தவரை 428க்கும் அதிகமான அளவை காற்று தரக்குறியீடு எட்டி இருக்கிறது. அப்படி இருக்கும்போது டெல்லியில் உள்ள காற்று மாசு அளவை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. கடுமையான காற்று மாசுவால் பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் சுவாச பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, டெல்லியில் காற்று மாசினை தடுக்க போதிய ஆய்வு நடத்தவில்லை என காற்றுதர மேலாண்மை ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 2 வாரத்தில் மீண்டும் கூட்டத்தை கூட்டி நீண்ட கால தீர்வு குறித்து ஆலோசித்து அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. டெல்லியின் காற்று மாசிற்கு 40% வாகனங்களே காரணம் என்றும் ஆனால் ஒட்டுமொத்தமாக விவசாயிகள் மீது குற்றம் சுமத்தப்படுகிறது எனவும் நீதிபதி தெரிவித்தார்.
இதையும் படிங்க: தலைநகர் டெல்லியில் தொடரும் காற்று மாசு..!! கூடவே பனிமூட்டத்துடன் குளிர் காற்று..!! மக்கள் கடும் பாதிப்பு..!!
கொரோனா காலத்தில் தான் அதிகளவு விவசாய பயிர் கழிவுகள் எரிக்கப்பட்டது என்றும் ஆனால், அப்போது தான் நீலவானினை கண்டோம் என்று தெரிவித்தார். வாகனங்கள் ஓடாத கொரோனா பெருந்தொற்று காலத்தில் தான் நீல வானத்தை டெல்லி மக்கள் கண்டார்கள் என்பதை மறக்காதீர் என்று தெரிவித்தார். உரிய நிபுணர்கள் அடங்கிய குழுவானது காற்று மாசினை தடுக்க திட்டங்களை வகுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதையும் படிங்க: மீண்டும் ஒரு நிர்பயா சம்பவம்... லபாலியல் வன்கொடுமை செய்து ரோட்டில் வீசிய கொடூரம்...!