இந்தியாவின் தலைநகரமான டெல்லியின் ஒன்பதாவது முதலமைச்சராகவும், நான்காவது பெண் முதலமைச்சராகவும் பதவியேற்றவர். பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த இவர், அரசியல் வாழ்க்கையில் தனது தொடக்க காலத்திலிருந்தே தலைமைப் பண்பு, அர்ப்பணிப்பு, மற்றும் பொது சேவையில் தீவிர ஈடுபாடு ஆகியவற்றால் பரவலாக அறியப்பட்டவர். டெல்லியின் அரசியல் வரலாற்றில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சியைப் பிடித்ததில் ரேகா குப்தாவின் பங்களிப்பு முக்கியமானது.
ஷாலிமார் பாக் தொகுதியில் இருந்து முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், மூன்று முறை நகராட்சி உறுப்பினராகவும், வடக்கு டெல்லி நகராட்சியின் மேயராகவும் பணியாற்றியவர். அவரது அரசியல் பயணம் மாணவர் அரசியலில் இருந்து தொடங்கி, பாஜகவின் மகளிர் அமைப்பான மகிளா மோர்ச்சாவில் முக்கிய பொறுப்புகளை வகித்து, டெல்லியின் முதலமைச்சராக உயர்ந்திருக்கிறார்.

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜக 48 இடங்களை வென்று 27 ஆண்டுகள் கழித்து ஆட்சியைப் பிடித்தது. இந்த வெற்றிக்கு பாஜகவின் தேர்தல் உத்தரவாதங்கள் முக்கிய பங்காற்றின. ரேகா குப்தா, ஒரு முதன்மை தலைவராக, இந்த உத்தரவாதங்களை முன்னிறுத்தி, மக்களின் நம்பிக்கையைப் பெற்று, ஆட்சியைப் பிடிக்க உதவினார். இந்த நிலையில் டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முதலமைச்சர் இல்லத்தில் நடந்த மக்களுடனான சந்திப்பின்போது ரேகா குப்தா தாக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதலில் அவருக்கு முகம் மற்றும் தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. முதலமைச்சரின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: இந்தியா கூட்டணி வேட்பாளர் மயில்சாமி அண்ணாதுரை? தமிழருக்கு போட்டி தமிழரா! நயினார் கேள்வி..!
டெல்லி முதல்வர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தலைநகர் டெல்லியில் முதலமைச்சருக்கே பாதுகாப்பு இல்லை என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார். ரேகா குப்தா தாக்கப்பட்ட சம்பவம் துரதிஷ்டவசமானது என்றும் மிகவும் கண்டிக்கத்தக்கது எனவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: நடிகர் ரஜினிகாந்துடன் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு! வாழ்த்துகளை பகிர்ந்து நெகிழ்ச்சி..!