2025 ஆம் ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை அக்டோபர் 20 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே முதல் இடத்தை பிடிப்பது பட்டாசு. அதற்கு அடுத்தபடியாக பலகாரம். உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பலகாரம் கொடுத்து தங்களது வாழ்த்துக்களை பகிர்வது வழக்கம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக பட்டாசுகள் இருக்கிறது.
பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடுவது என்பது வயது வித்தியாசம் பார்க்காமல் அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. ஆனால் டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 5 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கபட்டு வருகிறது. டெல்லியில் ஏற்பட்டுள்ள கடும் காற்று மாசு தாக்கத்தால் பட்டாசிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

மேலும், டெல்லியில் எந்த வகையான பட்டாசுகளை தயாரிப்பதற்கும், சேமிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும், ஆன்லைனில் டெலிவரி செய்வதற்கும், பட்டாசுகளை வெடிப்பதற்கும் முழுவதுமாக தடை விதிக்கப்பட்டது. தற்போது 5 ஆண்டுகளுக்குப் பிறகு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டெல்லியில் ஐந்து நாட்களுக்கு பொதுமக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இதையும் படிங்க: அரசு பள்ளிப் பாடங்களில் ஆர்.எஸ்எஸ்..!! விரைவில் அறிமுகம்.. டெல்லி அரசு அறிவிப்பு..!!
ஐந்து ஆண்டுகளாக பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், குழந்தைகள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் தடையை தளர்த்தலாம் எனும் மத்திய அரசில் கேட்டுக்கொள்ளப்பட்டதற்கு இணங்க பட்டாசுகள் வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால் மக்களும், பட்டாசு விற்பனையாளர்களும் சந்தோஷத்தில் உள்ளார். டெல்லியில் கடும் காற்று மாசு ஏற்படும் சூழல் இருப்பதால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர்.
இதையும் படிங்க: காவிரி மேலாண்மை ஆணையத்தின் 44வது கூட்டம்.. வரும் 26ம் தேதி டெல்லியில் கூடுகிறது..!!