தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரும் தோல்வியைச் சந்தித்த நிலையில், கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் முக்கிய ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார். தேர்தல் முடிவுகளுக்கான காரணங்களை ஆழமாகப் புரிந்துகொண்டு, கட்சியை மீண்டும் வலுப்படுத்தும் நோக்கில் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வரும் ஸ்டாலின், தோல்விக்கு முழு பொறுப்பை ஏற்றுக்கொண்டு, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளார்.
நேற்று மாவட்டச் செயலாளர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், “இந்தத் தோல்விக்கு நானே முழுப் பொறுப்பை ஏற்கிறேன். யாரையும் குறை கூற வேண்டாம். ஒன்றுபட்டு முன்னேற வேண்டும்” என்று தெரிவித்தார். திமுகவின் இந்தத் தோல்வி, குறிப்பாக புதிய அரசியல் சக்திகளின் எழுச்சி மற்றும் மக்களின் மனநிலை மாற்றம் ஆகியவற்றால் ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, தேர்தல் முடிவுகள் குறித்து விரிவான கள ஆய்வு செய்ய 36 பேர் கொண்ட சிறப்புக் குழுவை ஸ்டாலின் அமைத்துள்ளார்.

இந்தக் குழுவினர் ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியாக ஒதுக்கப்பட்டு, அங்குள்ள மாவட்டக் கழகச் செயலாளர்கள், வேட்பாளர்கள், முகவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் நேரடியாகச் சந்தித்து உரையாட உள்ளனர். தேர்தல் பணிகளில் ஏற்பட்ட தொய்வு, வாக்குச் சாவடி அளவிலான வாக்கு விவரங்கள், உள்ளூர் பிரச்னைகள், கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை இவர்கள் ஆய்வு செய்யவிருக்கின்றனர்.
இதையும் படிங்க: நீட் தேர்வை ரத்து செய்யாதே..!! நாளை மாநிலம் தழுவிய திக ஆர்ப்பாட்டத்திற்கு திமுக ஆதரவு..!!
இந்த நிலையில், சட்டமன்றத் தேர்தல் தோல்வி குறித்து அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். தேர்தல் முடிவுகள் குறித்து கள ஆய்வு செய்ய நியமித்த 36 பேர் கொண்ட குழுவுடன் திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். நாளை மறுநாள் 36 பேர் கொண்ட கள ஆய்வுக் குழுவினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் தோல்வி குறித்து ஆய்வு செய்ய இருக்கின்றனர்.
இதையும் படிங்க: தோல்விக்கு நானே பொறுப்பு! தேர்தல் பின்னடைவு குறித்து வெளிப்படையாக பேசிய திமுக தலைவர்!