காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது. இந்த சூழலில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் இதில் 100 பயங்கரவாதிகள் வரை கொல்லப்பட்டனர். இதை அடுத்து இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ஜம்முவை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது.

இந்தியா மீது மீண்டும் கடந்த 8 ஆம் தேதி இரவு பாகிஸ்தான் தாக்குதலை மேற்கொண்டது. வெள்ளிக்கிழமை அதிகாலை வரை கடும் மோதல் ஏற்பட்டது. பாகிஸ்தானின் 8 ஏவுகணைகள் தடுக்கப்பட்டுள்ளன. பஞ்சாப் மாநிலம், பதான்கோட் விமான தளத்தில் தாக்குதல் நடத்த முயன்ற நிலையில், இந்திய விமானப் படை பதிலடியை கொடுத்துள்ளது. இந்தியா மீதான பாகிஸ்தானின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்திய எல்லை பகுதியில் வசிக்கும் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவது, வழிபட்டு தலங்கள், பள்ளி, கல்லூரிகள், குடியிருப்புகள் என பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் தீவிரமடைந்து வருகிறது. இதையடுத்து உலகளாவிய தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் மே 9 ஆம் தேதி அன்று தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணிபுரிய அறிவுறுத்தியுள்ளன.
இதையும் படிங்க: போர்கால ஒத்திகை.. ஊழியர்களுக்கு விடுமுறை அளித்த ஐடி நிறுவனங்கள்..!

அதோட உள்நாட்டு மற்றும் சர்வதேச பணி தொடர்பான பயணங்களையும் தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக டெல்லி மற்றும் நாட்டின் வடக்கு பகுதிகளில் உள்ள ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகள் தற்போது நடைபெறும் தாக்குதல் காரணமாக உயர் எச்சரிக்கையில் இருந்து வருகின்றன. தொழில்நுட்ப நிறுவனமான டெலாய்ட் இந்தியா, உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணங்களை ஒத்திவைக்குமாறு தங்கள் ஊழியர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. அதோடு தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு உதவி செய்யும் விதமாக உதவி எண்ணையும் வழங்கியுள்ளது.

பாகிஸ்தான் இந்தியா எல்லைக்கு மிகவும் நெருங்கிய மாநிலங்களில் பணி புரியும் ஊழியர்கள் விரைவில் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதோடு அனைத்து ஊழியர்களும் பாதுகாப்பாக இருக்கவும், அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமாக செயல்படும் ஹச்சிஎல் டெக் நிறுவனம் சண்டிகர், குருகிராம், நோய்டா போன்ற அலுவலகங்களில் மே 9 ஆம் தேதி அன்று வீட்டில் இருந்து பணிபுரிய தங்கள் ஊழியர்களை கேட்டுக் கொண்டுள்ளது. டெக் மகேந்திரா நிறுவனமும் தற்போதைய இந்தியா - பாகிஸ்தான் பதற்றம் குறித்து சமூக ஊடகங்களிலோ அல்லது தங்கள் வாடிக்கையாளர்களிடமோ எந்த வித கருத்தையும் தெரிவிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இந்தியா எங்களை தாக்கவில்லை.. பாக். குற்றச்சாட்டை மறுத்த ஆப்கானிஸ்தான் அரசு!!