தேர்தல் ஆணையம் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் SIR-ஐ அறிவித்தது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம், கேரளா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்டவை அடங்கும். SIR என்பது வாக்காளர் பட்டியல்களை முழுமையாக சரிபார்த்து, இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் அல்லது தகுதியில்லாதவர்களை நீக்கி, புதிய வாக்காளர்களைச் சேர்ப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெறுகிறது.
எஸ் ஐ ஆர் படிவங்களை பூர்த்தி செய்து வாக்காளர்கள் அனைவரும் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. SIR படிவங்களை சமர்ப்பிக்கும் அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். படிவத்தை சமர்ப்பிக்க தேர்தல் ஆணையம் மேலும் மூன்று நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட எஸ்..ஐ.ஆர். படிவங்களை திருப்பி தருவதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைந்த நிலையில் மேலும் மூன்று நாட்களுக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

எஸ்.ஐ.ஆர். படிவங்களை திருப்பி தர டிசம்பர் 14ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த படிவத்தை சமர்ப்பிக்க தேர்தல் ஆணையம் அவகாசம் வழங்கி உள்ளது.
இதையும் படிங்க: விறுவிறு SIR... புதுக்கோட்டையில் 1.40 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்... ஆட்சியர் அறிவிப்பு...!
தமிழ்நாடு, குஜராத், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், சட்டீஸ்கர், அந்தமான் நிக்கோபாரில் எஸ்.ஐ.ஆர் படிவங்கள் சமர்ப்பிக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட எஸ்ஐஆர் படிவங்களை பெற்ற பின்னர் 19ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
இதையும் படிங்க: 30 நாள் தான் டைம்..!! அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் போட்ட அதிரடி உத்தரவு..!!