ஐதராபாத்தில் இருந்து பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து குறுக்கு வந்த பைக் மீது மோதியதால் பேருந்து தீப்பிடித்ததில் பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் பலர் காயமடைந்தனர்.
வால்வோ பேருந்தில் பயங்கரம்:
கர்னூல் மாவட்டத்தில் தனியார் டிராவல்ஸ் வால்வோ பேருந்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. கல்லூர் மண்டலத்தில் உள்ள சின்னதேகுரு அருகே காவேரி டிராவல்ஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்து உலிந்தகொண்டாவில் அருகே சென்றபோது இன்று அதிகாலை சுமார் 3.30 மணி அளவில், குறுக்கே வந்தே பைக் அதன் மீது மோதியது. அப்போது பைக்கின் பெட்ரோல் டேங்கில் பற்றிய தீயானது, மளமளவென பேருந்தின் முன்பக்கத்தில் பரவியது. சிறிது நேரத்திற்குள், முழு பேருந்தும் முற்றிலுமாக எரிந்தது.
இதையும் படிங்க: மகா பிரபு நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா?... வாழவே முடியாத இடத்திற்குள் கால் பதித்த கொசுக்கள்... அதிர்ச்சியில் ஆய்வாளர்கள்...!
30 பேர் பலி?
இந்த பேருந்தில் டிரைவர் கிளினர் உள்பட மொத்தம் 42 பயணிகள் இருந்ததாக கூறப்படும் நிலையில், 12 பேர் பேருந்தின் ஜன்னலை உடைத்து தப்பியதாக கூறப்படுகிறது. ஆனால், அதிவேகமாக தீ பரவி பேருந்து முழுவதும் எரிய தொடங்கியதால் பலர் வெளியேற முடியால் உள்ளேயே சிக்கிக் கொண்டனர். இதில் 23 பேர் வரை உயிரிழந்து இருப்பதாகவும், அந்த எண்ணிக்கை சுமார் 30 வரை அதிகரிக்கக் கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிஐஜி பிரவீன் குமார், மாவட்ட எஸ்பி விக்ராந்த் பாட்டீல், நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு மீட்பு பணியில் ஈடுப்பட்டு காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பினர். இதில் தீக்காயமடைந்த 11 பயணிகளில் 8 பேர் அரசு மருத்துவமனைகளிலும், 3 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்து தீப்பற்றியதும் ஓட்டுநர் மற்றும் கிளீனர் விபத்தில் இருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
முதலமைச்சர் இரங்கல்:
கர்னூல் மாவட்டத்தில் நடந்த பயங்கர பேருந்து விபத்து குறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது ஆழ்ந்த அதிர்ச்சியை தெரிவித்துள்ளார். தலைமைச் செயலாளர் மற்றும் பிற அதிகாரிகளிடம் பேசி விபத்து குறித்த விவரங்களை அறிந்து கொண்ட முதலமைச்சர், சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று மீட்புப் பணிகளில் பங்கேற்குமாறு உயர்மட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். காயமடைந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தேவையான உதவிகளையும், காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சையையும் வழங்க வேண்டும் என்று முதல்வர் பரிந்துரைத்துள்ளார்.
இதுகுறித்து சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ள அவர், “கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்ன தேகூர் கிராமத்திற்கு அருகே நடந்த பேரழிவு தரும் பேருந்து தீ விபத்து குறித்து அறிந்து நான் அதிர்ச்சியடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு அதிகாரிகள் அனைத்து உதவிகளையும் வழங்குவார்கள்” என தெரிவித்துள்ளார்.
கடந்த 14ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் தையத் கிராமம் அருகே ஜெய்சால்மர் - ஜோத்பூர் சாலையில், பேருந்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 3 குழந்தைகள் உட்பட 22 பேர் உயிரிழந்தனர். அதே பாணியில் தற்போது ஆந்திராவிலும் விபத்து நேர்ந்து இருப்பது பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இதையும் படிங்க: “ஏக்கருக்கு 25 ஆயிரம் செலவு செஞ்சும் எல்லாம் போச்சே”... கண்ணீர் விட்டு கதறும் விவசாயிகள்...!