குஜராத் மாநிலம், ஆனந்த் மாவட்டத்தில் மஹிசாகர் ஆற்றின் மீது அமைந்துள்ள கம்பீரா பாலத்தின் ஒரு பகுதி கடந்த கடந்த ஜூலை 9ம் தேதி அன்று காலை திடீரென இடிந்து விழுந்ததில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மத்திய குஜராத்தையும் சௌராஷ்டிராவையும் இணைக்கும் இந்த பாலத்தின் நடுப்பகுதி உடைந்து, அதில் பயணித்த ஐந்து முதல் ஆறு வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்தன. இவ்விபத்தில் ஒரு டிரக் உட்பட பல வாகனங்கள் சிக்கின,

விபத்து குறித்து உடனடியாக மீட்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் உயர்மட்டக் குழுவை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவிக்கப்பட்டது. காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு, அவர்களின் நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: பைக் மீது லாரி மோதி கோர விபத்து - மாமனார், மருமகன் பரிதாபமாக பலி...!
விபத்தின்போது, ஒரு டேங்கர் லாரி பாலத்தின் உடைந்த பகுதியில் அந்தரத்தில் தொங்கியது, இது மீட்புப் பணிகளுக்கு பெரும் சவாலாக இருந்தது. இந்நிலையில் சுமார் 27 நாட்களுக்குப் பிறகு, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகளின் கூட்டு முயற்சியால் டேங்கர் லாரி தற்போது பாதுகாப்பாக மீட்கப்பட்டது. பலூன் தொழில்நுட்பம் மற்றும் ட்ரோன் கண்காணிப்பு மூலம் இந்த சிக்கலான மீட்பு நடவடிக்கை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இவ்விபத்து 40 ஆண்டுகள் பழமையான பாலத்தின் பராமரிப்பு குறைபாடுகளை வெளிப்படுத்தியது, கடந்த ஆண்டு பழுது பார்க்கப்பட்டிருந்த போதிலும், பாலத்தின் அமைப்பு பலவீனமாக இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன.

மீட்புப் பணியில் உள்ளூர் மக்களும் உதவினர், மேலும் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்விபத்து குஜராத் மாநிலத்தில் உள்கட்டமைப்பு பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. மாநில அரசு இதுபோன்ற விபத்துகளைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் கோரிக்கை விடுக்கும் பொதுமக்கள், புதிய பாலம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அதிமுக மாஜி அமைச்சர் கார் மோதி தூக்கி வீசப்பட்ட இளைஞர்.. மூடி மறைக்க செய்த சதி...!