உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத் திருத்தலத்திலிருந்து டேராடூன் நோக்கிப் புறப்பட்ட ஹெலிகாப்டர் ஒன்று சமோலி மாவட்டத்தின் மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. பைலட் உட்பட 6 பேருடன் சென்ற இந்த ஹெலிகாப்டரைத் தேடும் பணியிலும், பயணிகளை மீட்கும் நடவடிக்கைகளிலும் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.
பத்ரிநாத் கோயிலில் சாமி தரிசனத்தை முடித்துக் கொண்டு பக்தர்கள் மற்றும் பைலட் உட்பட 6 பேருடன் ஹெலிகாப்டர் இன்று டேராடூன் நோக்கிப் புறப்பட்டது. அந்த ஹெலிகாப்டர் சமோலி மாவட்ட வான்வெளியில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

சமோலி மாவட்டத்தில் இடி, மின்னல், ஆலங்கட்டி மழை மற்றும் மணிக்கு 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், பத்ரிநாத்-ஜோஷிமத் வழித்தடத்தில் கனமழை மற்றும் பனிப்பொழிவு நீடிக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. பத்ரிநாத்திலிருந்து திரும்பியபோது வழியில் நிலவிய மிகக் கடுமையான மோசமான வானிலையே இந்த விபத்துக்குக் காரணம் என்று மாவட்ட நிர்வாக வட்டாரங்கள் முதற்கட்டத் தகவலில் தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க: ராகுல் காந்தி பயணத்தில் பரபரப்பு!! அடுத்தடுத்து மோதிய 5 வாகனங்கள், ஆம்புலன்ஸ்.. பலர் படுகாயம்!!
விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன், மாநில பேரிடர் மீட்புப் படையினர் (SDRF), தேசிய பேரிடர் மீட்புப் படையினர் (NDRF) மற்றும் மாவட்டக் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நள்ளிரவில் பயங்கரம்... சரக்கு வேன் மீது படுவேகமாக மோதிய ஆம்னி பஸ்... 40 பயணிகளுக்கு நேர்ந்த பரிதாபம்...!