நேபாளத்தில் அரசு விதித்த சமூக ஊடகத் தடையை எதிர்த்து தலைநகர் காத்மாண்டு உள்ளிட்ட பல நகரங்களில் இளைஞர்கள் தொடங்கிய போராட்டம் கடுமையான கலவரமாக உருவெடுத்துள்ளது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைதளங்களை, உள்நாட்டு சட்டங்களை மீறியதாகக் கூறி, அரசு தடை செய்தது. இதற்கு எதிராக ஜென்-இசட் தலைமுறையினர் மற்றும் மாணவர்கள் நாடாளுமன்ற வளாகத்தை முற்றுகையிட்டனர். ஊழல், பொருளாதார ஏற்றத்தாழ்வு, மற்றும் அரசின் சர்வாதிகார அணுகுமுறைக்கு எதிராகவும் இவர்கள் குரல் எழுப்பினர்.

கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 8) தொடங்கிய இந்தப் போராட்டத்தில், காவல்துறையினர் கண்ணீர் புகை, ரப்பர் குண்டுகள், மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியதால், குறைந்தது 22 பேர் உயிரிழந்தனர், 350-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். நாடாளுமன்றம், குடியரசுத் தலைவர் இல்லம், பிரதமர் இல்லம், மற்றும் அமைச்சர்களின் வீடுகள் தாக்கப்பட்டு, சிலவற்றுக்கு தீ வைக்கப்பட்டன.
இதையும் படிங்க: கட்டுக்கடங்காத வன்முறை.. நேபாளம் முன்னாள் பிரதமரின் மனைவி பரிதாப பலி..!
இதில், முன்னாள் பிரதமர் ஜலநாத் கானலின் வீட்டுக்கு வைக்கப்பட்ட தீயில் அவரது மனைவி ராஜ்யலட்சுமி உயிரிழந்தார். காவல்துறையினர் மீது கற்கள் வீசப்பட்டதோடு, நேபாளி காங்கிரஸ் கட்சி அலுவலகமும் எரிக்கப்பட்டது. காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டு, ராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
https://x.com/i/status/1965667546428047814
இந்தக் கலவரத்தால் பிரதமர் கே.பி. சர்மா ஒலி மற்றும் குடியரசுத் தலைவர் ராம்சந்திர பவுதேல் ஆகியோர் பதவி விலகினர். உள்துறை அமைச்சர் உட்பட மூன்று மூத்த அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதாகவும், "கண்டதும் சுடு" உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இளைஞர்களின் தொடர் போராட்டத்தால் அரசு சமூக ஊடகத் தடையை நீக்கியது, ஆனால் கலவரம் இன்னும் அடங்கவில்லை. இந்தக் கலவரம் நேபாளத்தில் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியை மேலும் ஆழப்படுத்தியுள்ளது. இந்நிலையில் போராட்டம் தீவிரமடைந்து, காத்மாண்டுவில் உள்ள பிரபல ஹில்டன் ஹோட்டலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இந்த ஹோட்டல் ஆளும் கட்சித் தலைவர் ஒருவருக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கலவரமான நேபாளம்.. கொந்தளிக்கும் இளைஞர்கள்.. பிரதமரை தொடர்ந்து குடியரசுத் தலைவரும் ராஜினாமா..!!