காஷ்மீரில் உள்ள பகல்காம் என்ற பகுதியில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்தியா தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

தீவிரவாதிகளை மட்டுமே குறிவைத்து இந்தியா தாக்கி வந்த நிலையில் பொதுமக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளை குறி வைத்து பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதனால் ஆத்திரமடைந்த இந்தியா பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளை குறி வைத்து சரமாரி தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான் என்றும் தாக்குதலை தகர்த்த இந்தியா ஏவுகணைகளை ஏவி பாகிஸ்தானை நிலைகுலையச் செய்தது. பெரும் போர் பதற்றம் இரு நாடுகளுக்கு இடையே நிலவி வந்த நிலையில் இரு நாடுகளும் போர் பதற்றத்தை உடனடியாக தணிக்க வேண்டும் என்று பல்வேறு நாடுகள் வலியுறுத்தின.

அமெரிக்கா சார்பில் சமரச பேச்சுவார்த்தை நடத்தவும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்கா நடத்திய நீண்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு உடலை போர் நிறுத்தத்திற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நீண்ட பேச்சு வார்த்தைக்கு பின் போர் நிறுத்த ஒப்பந்தம் ஒப்புக்கொள்ளப்பட்டதை அறிந்து மகிழ்ச்சியடைவதாகவும் கூறியுள்ளார். போர் நிறுத்தத்தை உடனடியாக ஒப்புக்கொண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு தனது வாழ்த்துக்கள் என்றும் கூறியுள்ளார். சாதுரியமாகவும் புத்திசாலித்தனமாகவும் போரை நிறுத்த ஒப்புக்கொண்ட இரு நாடுகளுக்கும் தனது வாழ்த்துக்களை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நொடிக்கு நொடி பதற்றம்..! மக்களின் உள்கட்டமைப்பே குறி.. பாக். முகத்திரையை கிழித்த இந்தியா..!