ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பாக இந்திய ராணுவத்தின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இன்று அதிகாலை தீவிரவாத தளங்களை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் தொடர்பாக காலை 10 மணிக்கு விளக்கம் அளிக்கப்படும் என்று இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்திய ராணுவத்தின் தரப்பில் விளக்கம் அளிப்பதற்கு முன்பாக, பாகிஸ்தான் இதற்கு முன்னதாக நடத்திய தாக்குதல்கள் தொடர்பான வீடியோக்கள் ஒளிபரப்பப்பட்டது. மும்பை தாக்குதல், நாடாளுமன்ற தாக்குதல் உள்ளிட்ட தீவிரவாத தாக்குதல் தொடர்பான விளக்க படங்கள் மற்றும் ஏற்பட்ட இழப்புகள் குறித்தும் வீடியோ ஒளிபரப்பப்பட்டது.

தொடர்ந்து, மத்திய வெளியுறவு துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது; தீவிரவாத தாக்குதலில் எல்லை பகுதிகளில் 350 அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர். தீவிரவாத தாக்குதலில் இதுவரை 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அதுமட்டுமல்லாது 600 வீரர்கள் பலியாகி உள்ளனர். குடும்பத்தினர் முன்னர் அப்பாவி மக்கள் நெற்றி பொட்டில் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். பகல்காம் தாக்குதல் பாகிஸ்தான் மூலம் தான் நடத்தப்பட்டது. பகல்காமில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் இந்தியாவிடம் உள்ளது. இந்த தாக்குதலில் பாகிஸ்தான் அரசின் தொடர்பு இருப்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. மதரீதியான தாக்குதலை உருவாக்கும் எண்ணத்தில் தான் காஷ்மீரில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பகல் காமில் நடத்தப்பட்ட தாக்குதல் மிகக் கொடூரமானது.
இதையும் படிங்க: ஓவைசியின் பூரிக்க வைக்கும் தேசப்பற்று..! ஒரு அடி கூட எதிரி எடுத்து வைக்கக்கூடாது..!

ஏப்ரல் 22 ஆம் தேதி இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். 2001 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நாடாளுமன்றத் தாக்குதலில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர ஐநா தவறிவிட்டது.. காஷ்மீரில் சுற்றுலாவை முடிவுக்கு கொண்டு வரவே பகல்காம் தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானின் முயற்சியை இந்தியா வெற்றிகரமாக முறியடித்து விட்டது. பாகிஸ்தான் தீவிரவாதிகளின் சொர்க்க பூமியாக உள்ளது.

ராஜாங்கரீதியாக பல நடவடிக்கைகளை எடுத்து தீவிரவாதத்தை பாகிஸ்தான் தடுக்கவில்லை. ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பவதை தடுக்கவே பகல்காம் தாக்குதல் நடத்தப்பட்டது. பயங்கரவாதிகளுக்கு தக்க பாடம் கற்பிக்க ஆபரேஷன் சிந்தூர் மிக முக்கியமானது. தீவிரவாதிகளின் உள்கட்டமைப்பை தகர்க்க ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டது. இவ்வாறு அவர் விளக்கம் அளித்தார்.
இதையும் படிங்க: இந்தியாவின் அதிரடி அட்டாக்.. உ.பி.க்கு பறந்த ரெட் அலர்ட்..! டிஜிபி கொடுத்த அட்வைஸ்..!