ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தீவிரவாதத்தை ஒடுக்க இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது. இதனிடையே, உத்திரபிரதேச மாநில போலீசார் பாதுகாப்பு படையினருடன் இணைந்து செயல்படும்படி டிஜிபி உத்தரவிட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தின் காவல்துறையினர் முக்கிய இடங்களில் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிவிப்பில், பயங்கரவாத மறைவிடங்கள் மீது இந்திய ராணுவத்தின் இலக்கு தாக்குதலை தொடர்ந்து உத்தரபிரதேசத்தில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அனைத்து காவல் கள அமைப்புகளும் பாதுகாப்பு பிரிவுகளுடன் ஒருங்கிணைக்கவும் மற்றும் முக்கிய நிறுவல்களின் பாதுகாப்பை பலப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவை சீண்டினால் இனி இப்படி தான்... எச்சரிக்கும் அமித்ஷா!

ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பையும் உறுதிசெய்ய உத்திரபிரதேசம் காவல்துறை விழிப்புடனும், ஆயுதங்களுடனும், முழுமையாக தயாராகவும் உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இறங்கி அடித்த இந்தியா; பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்கள் காலி...!