ஏர் பிரான்ஸ் லுப்தான்சா, பிரிட்டிஷ் ஏர் வேய்ஸ் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் பாகிஸ்தான் வான்வவெளியைப் பயன்படுத்துவதை நிறுத்தியுள்ளன.
ஜம்மு காஷ்மீரின் பகல்ஹாமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 27 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள். இந்தத் தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா அறிவித்தது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, அட்டாரி - வாகா எல்லை மூடல், சார்க் விழா ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகள் இதில் அடங்கும். மேலும் தீவிரவாதிகளுக்கு பதிலடித் தரும் வகையில் ராணுவத்தின் முப்படைகளுக்கு மத்திய அரசு அதிகாரங்களை வழங்கி உள்ளது.

மேலும் இந்திய ராணுவம் எல்லையில் போர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. மேலும் பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக பல்வேறு எதிர் நடவடிக்கைகளை அறிவித்தது. அதில் பாகிஸ்தான் வான் வெளியை இந்தியா பயன்படுத்தக் கூடாது என்பதும் ஒன்றாகும். இதே போல் இந்தியாவும் பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான் வெளியைப் பயன்படுத்தக் கூடாது என்று சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தற்போது ஏர் பிரான்ஸ், லுப்தான்ஸா, பிரிட்டிஷ் ஏர்வேஸ், ஓமன் ஏர் உள்ளிட்ட சர்வதேச விமான நிறுவனங்கள் பாகிஸ்தான் வான் வெளியைப் பயன்படுத்துவதை நிறுத்துவதாக அதிரடியாக அறிவித்துள்ளன.

பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு அதிகளவில் கட்டணத்தை பாகிஸ்தான் வசூலித்து வருகிறது. இந்த நிறுவனங்களின் இந்தத் திடீர் அறிவிப்பால் பாகிஸ்தானின் பொருளாதாரத்தில் மிகுந்த பாதிப்பையும் பெரும் நஷ்டத்தையும் ஏற்படுத்தும் என்று விமான சேவை நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இந்த முடிவு குறித்து ஏர் பிரான்ஸ் கூறுகையில், "இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில் பாகிஸ்தான் வான் வெளியைப் பயன்படுத்துவதை தவிர்க்கும் முடிவை எடுத்துள்ளதாக" தெரிவித்துள்ளது. இது பாகிஸ்தானுக்கு எதிராக எடுக்கப்பட்ட மிகப்பெரிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: போக்குவரத்து விதிகளை மீறினானல்..? ஓட்டுநர் உரிமம் ரத்து.. வந்தது புதியவிதி..!
இதையும் படிங்க: தமிழகத்தில் பாகிஸ்தானியர்கள், வங்கதேசத்தினர்.. முதல்வர் ஸ்டாலினை உசுப்பும் மத்தியமைச்சர் எல்.முருகன்!