ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடூர பயங்கரவாத தாக்குதல் நாட்டையே உலுக்கிப்போட்டுள்ளது. சுற்றுலா சென்ற அப்பாவி மக்கள் 26 பேரை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தாய்பா அமைப்பின் கிளை பிரிவான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் அமைப்பு இதற்கு பொறுப்பேற்றது.
சம்பவத்தின் போது இந்துக்களை மட்டும் குறி வைத்து பயங்கரவாதிகள் கொலை செய்தனர். இந்த நிலையில் பயங்கரவாதிகளை வேட்டையாட அமித்ஷா மேற்பார்வையில் ஆப்ரேஷன் நடக்கிறது. இன்னொரு பக்கம் ஜம்மு-காஷ்மீர் முழுதும் பந்த் நடக்கிறது.

இந்த நிலையில் தாக்குதல் நடந்த விதம் பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, இந்துக்களையும் ஆண்களையும் குறி வைத்தே இந்த கொடூர தாக்குதலை பயங்கரவாதிகள் நடத்தி இருக்கின்றனர். மகாராஷ்டிராவை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் 5 பேரில் 2 ஆண்களை பயங்கரவாதிகள் சுட்டு கொன்றனர். அந்த குடும்பத்தில் உயிர் பிழைத்த பெண் ஒருவர் பதற்றத்துடன் இது பற்றி விவரித்தார்.
எங்கள் குடும்பத்தினர் 5 பேர் சுற்றுலாவுக்கு வந்திருந்தோம். அங்கு வந்த பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகளை சரமாரியாக சுட்டு கொன்றனர். என் அப்பாவையும், மாமாவையும் சுட்டுக்கொலை செய்தார்கள். பயங்கரவாதிகள் உள்ளூர் போலீஸ் போல சீறுடை அணிந்து இருந்தனர். ராணுவ வீரர்கள் அணியும் மாஸ்க் போட்டிருந்தனர்.
இதையும் படிங்க: என்ன நடந்துச்சு சொல்லுங்க..! அமித் ஷா, உமரிடம் விசாரித்த ராகுல்.. ஆதரவாக இருப்போம் என உறுதி..!

அந்த இடத்தில் நன்கு நோட்டமிட்டு இந்துக்களை மட்டும் குறிவைத்து சுட்டு தள்ளினர். பின்னர் இருந்த கூட்டத்தில் யார் இந்து, யார் முஸ்லிம் என்ற குழப்பம் வந்தது. உடனே சுற்றுலா பயணிகளை முஸ்லிம்கள் ஓதும் அஸானை ஓதும்படி வற்புறுத்தினர். யாருக்கெல்லாம் தெரியவில்லையோ, அவர்களை இந்துக்கள் எந்து முடிவு செய்து சுட்டுகொன்றனர். இந்து மதம் ஆபத்தில் சிக்கி உள்ளது. நான் என் குடும்பத்தை இழந்து விட்டேன் என்று அந்த பெண் கூறினார்.
மேலும் மற்றொரு வீடியோவில் கணவரை இழந்த பெண் ஒருவர், நடந்த சம்பவத்தை கூறி உள்ளார். அதில் நான் உணவருந்த வந்த போது, என் கணவரை நோக்கி வந்த பயங்கரவாதிகள், உன் பெயர் என்ன? என, விசாரித்தனர். முஸ்லிம் இல்லை என்பதை அறிந்த உடன் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றனர் என கதறியபடி அந்த பெண் கூறினார்.

கணவரை இழந்த மற்றொரு பெண், தன்னையும் சுட்டுக்கொல்லும்படி பயங்கரவாதியிடம் கூறியதாகவும், அதற்கு பயங்கரவாதி முடியாது. மோடியிடம் சென்று சொல் என கூறியதாகவும் தெரிவித்தார். இவ்வாறு இந்துக்களை மட்டும் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜம்முவில் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் வெடித்தது.
பாஜவினர், இந்து அமைப்பினர், பொதுமக்கள் பங்கேற்றனர். பயங்கரவாதிகளுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு எதிராகவும் ஆக்ரோஷமாக கோஷம் போட்டனர். உலக வரைபடத்தில் இருந்தே பாகிஸ்தான் அழிக்கப்படும் என்று ஆக்ரோஷத்துடன் எச்சரிக்கை விடுத்தனர். இந்துக்கள் நடத்திய போராட்டத்தால் ஜம்முவில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: என்ன நடந்துச்சு சொல்லுங்க..! அமித் ஷா, உமரிடம் விசாரித்த ராகுல்.. ஆதரவாக இருப்போம் என உறுதி..!