கீழடி அகழாய்வு, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வைகை ஆற்றங்கரையில் 2013 முதல் நடைபெற்று வரும் ஒரு முக்கியமான தொல்லியல் ஆய்வாகும். இது தமிழர்களின் பண்டைய நாகரிகத்தை, குறிப்பாக கி.மு. 6-ஆம் நூற்றாண்டு வரையிலான எழுத்தறிவு மற்றும் நகர நாகரிகத்தை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வு முதலில் இந்திய தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டு, பின்னர் தமிழ்நாடு தொல்லியல் துறையால் தொடரப்பட்டது.
மத்திய கலாச்சார அமைச்சகம், அறிக்கையில் திருத்தங்கள் தேவை என்று கூறி, அதை மீண்டும் அனுப்பியதாகவும், அறிவியல்பூர்வமான கூடுதல் தரவுகள் தேவை என கூறியது. கீழடி அகழாய்வு முடிவுகளை வெளியிடுவதில் மத்திய அரசின் மறுப்பு கூறி இருப்பது குறித்து பல விமர்சனங்களும் கருத்துக்களும் தமிழ்நாட்டில் எழுந்துள்ளன.
கீழடி அகழாய்வு தொடர்பாக மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், கீழடியின் தொன்மை மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை உறுதிப்படுத்த மேலும் அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் தேவை என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஆக.31ம் தேதி சீனா செல்கிறார் பிரதமர் மோடி..!! மெல்ல மெல்ல மேம்படும் இருநாட்டு உறவு..!

இந்தக் கருத்து, கீழடி அகழாய்வில் கிடைத்த தரவுகளுக்கு போதுமான அறிவியல் ஆதாரங்கள் இல்லை என்பதாகவும், இதனால் தமிழர் நாகரிகத்தின் தொன்மையை மறுப்பதாகவும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
இந்த நிலையில், மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன் இன்று பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என கமல்ஹாசன் கூறியுள்ளார்.
ஒரு கலைஞனாகவும் தமிழ்நாட்டின் பிரதிநிதியாகவும் அவரிடம் சில கோரிக்கைகளைத் தெரிவித்து இருப்பதாகவும்,அவற்றுள் தலையாயது கீழடி என்றும் தெரிவித்தார்.
தமிழின் தொன்மையை, தமிழ் நாகரிகத்தின் பெருமையை உலகிற்கு உரக்கச் சொல்லும் தமிழர்களின் முன்னெடுப்புகளுக்கு பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாக கமல் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: உத்தரகாண்டை புரட்டிப்போட்ட வெள்ளப்பெருக்கு.. 4 பேர் பலி.. பிரதமர் மோடி இரங்கல்..!!