மக்களவையில் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்த விவாதத்தின் போது திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உரையாற்றினார். அப்போது, தங்களுக்கு தேசப்பற்று இல்லை என்பது போல் அமித் ஷா பேசுவதாக தெரிவித்தார். நாட்டை எந்த விதத்திலும் தமிழ்நாடு விட்டுக் கொடுத்ததில்லை என்றும் நாட்டிற்காக பேரணி நடத்தியவர் முதலமைச்சர் என்றும் கூறினார்.
தேசப்பற்று தமிழர்கள் ஒன்றும் குறைந்தவர்கள் கிடையாது என்று தெரிவித்த அவர், ஆளுங்கட்சியை சேர்ந்தோர் எப்போதும் நேருவைப் பற்றி பேசுவதால் இளைஞர்கள் நேருவை குறித்து படிக்கின்றனர் அதற்கு நன்றி என கூறினார்.
நேருவை காங்கிரஸை விட பாஜக தான் அதிகம் நினைவில் வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பாக குழு அமைத்து அனுப்பியதற்கு மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த கனிமொழி எம்பி, ஆனால் வெளிநாட்டிற்கு சென்று விளக்க வேண்டிய நிலை வராமல் இருந்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: #BREAKING: உங்களுக்கு எங்க வலிக்குது.. பாகிஸ்தானை காப்பாத்துறீங்களா? காங்கிரசை பந்தாடிய அமித் ஷா..!
அம்பேத்கர், பெரியார் உள்ளிட்டோர் குறைத்த விமர்சனங்களால் மாணவர்கள் அவர்களை அதிகம் படிப்பதாகவும் தெரிவித்தார். எதிர்க்கட்சிகளை குற்றம் சாட்டின் வகையிலேயே அமித்ஷாவின் பேச்சு இருந்ததாகவும் உள்நோக்கத்துடன் அமித் ஷா பேசியதாகவும் குற்றம் சாட்டினார்.

தேர்தல் நடைமுறை, ஜனநாயகத்தை காக்க வேண்டிய கடமை நமக்கு இருப்பதாகவும், கங்கைகொண்ட சோழபுரத்திற்கு பிரதமர் மோடி வந்தார்., கங்கையை வெல்வான் தமிழன் என தெரிவித்தார்.
தீவிரவாத தாக்குதலில் உயிர்வழி ஏற்பட்டதால் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு வெளிநாடு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும், புல்வாமா தாக்குதல் தொடர்பான கேள்விக்கு இதுவரை பதில் இல்லை என்றும் தெரிவித்தார்.
மும்பை தாக்குதல் நிகழ்ந்த போது பொதுமக்களிடம் பிரதமர் மன்னிப்பு கேட்டதாகவும், பகல்ஹாம் தாக்குதலுக்கு யார் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார்.
Raw மற்றும் உளவுத்துறை என்ன செய்து கொண்டிருந்தது என்று கேள்வி எழுப்பிய அவர், மக்களை பாதுகாப்பதில் பாஜக அரசு தோல்வி அடைந்து விட்டதாக விலாசினார்.
தேர்தலின் போது தமிழர் பெருமை பேசும் பாஜக அரசு கீழடி அறிக்கையை ஏற்க மறுப்பதாகவும் அரசாங்கம் பாஜகவிடம் தான் உள்ளது., மக்களை காக்க தவறிவிட்டீர்கள் என்று குற்றம் சாட்டினார். கேள்வி எழுப்பினாலே தேசவிரோதி முத்திரை குத்துவதா என்று கனிமொழி சாடினார்.
இதையும் படிங்க: #BREAKING: வெறும் 22 நிமிஷம் தான்.. அவங்க பாஷையிலயே வச்சு செஞ்சுட்டோம்.. ஆப்ரேஷன் சிந்தூர் பற்றி ராஜ்நாத் சிங் பேச்சு..!