நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் பகல்காம் தாக்குதல் தொடர்பாகவும் ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாகவும் விவாதிக்க கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
பகல் காம் தாக்குதல், ராணுவ தாக்குதல் தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கப்படும் என்று மத்திய அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக மக்களவையில் பாதுகாப்பு துறை அமைச்சர் விளக்கம் அளித்தார்.
அப்போது பேசிய அவர், இந்திய ராணுவ வீரர்கள் நாட்டின் இறையாண்மையை தீர்க்கமாக பாதுகாத்ததாக தெரிவித்தார். பகல்காமில் 26 அப்பாவிகளை அவர்களின் மதத்தை கேட்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றதாகவும் பாகிஸ்தானை இந்தியா தாக்கிய போது அந்த நாட்டு மக்களை குறிவைக்கவில்லை என்றும் விளக்கம் அளித்தார்.
இதையும் படிங்க: இந்தியாவின் விருப்பங்களை உச்சத்திற்கு எடுத்து சென்ற சுக்லா.. பெருமிதத்துடன் வாழ்த்திய ராஜ்நாத் சிங்..!
இந்திய ராணுவத்தின் வீர தீர செயலுக்கு தலைவணங்குவதாக ஆபரேஷன் சிந்துர் குறித்து நிகழ்ச்சி படக் கூறினார். பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளின் பயிற்சி முகாம்களை தாக்கி அடித்ததாகவும் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் உளவுத்துறையின் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளை வீழ்த்தியதாகவும் தெரிவித்தார்.

இந்தியாவை குறி வைத்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்கள் ஒன்று கூட வெற்றி பெறவில்லை என்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பாகிஸ்தான் ராணுவ கட்டமைப்புகளை நமது விமானப்படை தகர்த்தது எனவும் கூறினார்.
நோக்கம் நிறைவேற்றியதால் தான் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நிறுத்தினோம் என்றும் நமது மூன்று படைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு இந்த சாதனையை செய்தன என்றும் தற்காப்புக்காக நடத்தப்பட்டதே ஆபரேஷன் சிந்தூர்., அது அத்துமீறல் கிடையாது என்றும் தெரிவித்தார்.
மதத்தின் பெயரால் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நம் மக்களை கொன்றார்கள் என்றும் பயங்கரவாதிகளுக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க பதிலடி தாக்குதல்களை மே 6 மற்றும் ஏழாம் தேதிகளை நடத்தி உள்ளோம் என்றும் தெரிவித்தார்.
கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் பெரும்பாலானோர் ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பினர் என்றும் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளை கொன்றதாகவும் தெரிவித்தார்.
பாகிஸ்தானின் ட்ரோன்களை ஆகாஷ் மற்றும் எஸ் 400 ஏவுகணை அமைப்புகள் மூலம் தகர்த்ததாக தெரிவித்த ராஜ்நாத் சிங், பாகிஸ்தானை தாக்கி விட்டு அந்நாட்டின் ராணுவ தலைமை இயக்குனருக்கு தகவல் தந்ததாக கூறினார்.
ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் இந்தியாவை தாக்க பாகிஸ்தான் முயற்சி செய்ததாக கூறிய அவர், பாகிஸ்தான் ராணுவத்தின் ஒவ்வொரு தாக்குதலையும் முறியடித்ததாக கூறினார்.
இந்திய ராணுவ தளவாடங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தாய், சகோதரிகளின் குங்குமத்திற்காக நமது படைகள் பயங்கரவாதிகளை கொன்று பழிவாங்கியதாகவும் கூறினார்.
இந்திய ராணுவத்தின் துல்லியமான தாக்குதல்களால் ஒன்பது தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தார்.
வெறும் 22 நிமிடங்களில் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் அடித்தொழிக்கப்பட்டதாக கூறிய அவர், பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறினால் பாலக்கோட் தாக்குதல் பாணியில் பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்தார். இந்தியாவை தாக்க நினைத்தால் அவர்களின் கையில் முறித்து விடுவோம் என்றும் எத்தனை இந்திய விமானங்கள் தாக்கி அளிக்கப்பட்டது என எதிர் கட்சிகள் கேட்பதாகவும் தெரிவித்தார்.
ஆனால், எத்தனை பாகிஸ்தான் விமானங்கள் தாக்கி அடிக்கப்பட்டது என கேள்வி எழுப்பவில்லை என்றும் இந்தியா எப்போதும் அமைதியை விரும்பும் நாடாக இருக்கிறது எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எதிர்பார்ப்புடன் காத்திருந்த முக்கிய விவாதம்! பிரதமர் மோடி பார்லிமென்ட்க்கு வருகை... பரபரப்பு!