நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் பகல்காம் தாக்குதல் தொடர்பாகவும் ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாகவும் விவாதிக்க கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
பகல் காம் தாக்குதல், ராணுவ தாக்குதல் தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கப்படும் என்று மத்திய அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கமளித்தார். அப்போது காங்கிரஸ் கட்சி மீது சரமாரி குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
மக்களைக் காக்க வேண்டியது எங்கள் கடமை தான் ஆனால் உங்கள் ஆட்சியில் என்ன நடந்தது என ப. சிதம்பரத்திற்கு கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: #BREAKING: வெறும் 22 நிமிஷம் தான்.. அவங்க பாஷையிலயே வச்சு செஞ்சுட்டோம்.. ஆப்ரேஷன் சிந்தூர் பற்றி ராஜ்நாத் சிங் பேச்சு..!
இப்போது நாங்கள் தான் ஆட்சியில் உள்ளோம் என்று தெரிவித்த அவர், இதற்கு நாங்கள் தான் பொறுப்பு என்றும் ஆனால் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பாகிஸ்தானுக்கு நன்னடத்தை சான்று தருவதாகவும் விமர்சித்தார்.
உங்கள் ஆட்சியில் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்ற போது யார் பொறுப்பு என்றும் கேள்வி எழுப்பினார். இன்னும் என்ன மாதிரியான ஆதாரங்கள் தேவைப்படுகிறது என ப சிதம்பரத்திற்கு அமித் ஷா கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும் பாகிஸ்தானை காப்பாற்ற ஏன் முயற்சி செய்கிறீர்கள் என காங்கிரசுக்கு தனது கேள்வியை முன் வைத்தார். பகல் காம் பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானை காப்பாற்ற, தப்ப வைக்க காங்கிரஸ் முயற்சி செய்வதாக மக்களின் உணர்வுகளை காங்கிரஸ் மதிக்கவில்லை என்றும் அமித் ஷா குற்றம் சாட்டினார்.
ப. சிதம்பரத்தின் கருத்து தனக்கு அதிருப்தியை ஏற்படுத்தியாக கூறிய அவர், ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பாக ராஜ்நாத் சிங் தெளிவாக விளக்கமளித்த பின்னும் எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆளுநர் பின்னால ஒளிஞ்சிக்கவா உள்துறை அமைச்சர்? கௌரவ் கோகாய் சரமாரி கேள்வி..!