கடந்த ஆண்டு ஏப்ரல் 22-ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலில், சுற்றுலாப் பயணிகளின் மதத்தை வைத்து கேட்டறிந்த பிறகு 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் இந்தியாவை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதற்கு கடுமையான பதிலடியாக, மே 6 மற்றும் 7-ஆம் தேதிகளில் இந்திய ராணுவம் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானுக்குள் ஆழமான தாக்குதலை நடத்தியது. இந்தத் தாக்குதலில் பயங்கரவாத அமைப்புகளின் மறைவிடங்கள், பயிற்சி முகாம்கள் மற்றும் பாகிஸ்தான் விமானப்படை தளங்களும் குறிவைக்கப்பட்டு பெரும் சேதம் ஏற்படுத்தப்பட்டது.
முதலில் இந்தத் தாக்குதலால் எந்த பாதிப்பும் இல்லை என்று பாகிஸ்தான் அரசு மிகவும் தீவிரமாக மறுத்தது. ஆனால் படிப்படியாக அவர்களுக்கு ஏற்பட்ட பெரும் இழப்புகள் வெளியே தெரியத் தொடங்கின. இந்நிலையில், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முக்கிய தளபதியான ஹபீஸ் அப்துர் ரவூப் இப்போது இந்தத் தாக்குதலில் தங்களுக்கு மிகப்பெரிய சேதம் ஏற்பட்டதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: பாக்., சின்ன தப்பு பண்ணிருந்தாலும்?! மொத்தமா சிதைச்சிருப்போம்! ராணுவ தளபதி தகவல்!
அண்மையில் அவர் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் பேசியதாவது: “மே 6 மற்றும் 7 தேதிகளில் முரிட்கேவில் என்ன நடந்தது என்பது உங்களுக்குத் தெரியும். அது ஒரு பெரிய தாக்குதல். அந்தத் தாக்குதலின் போது குழந்தைகள் யாரும் அங்கு இல்லை.

நிலைமையை அறிந்து குழந்தைகளை அங்கிருந்து வெளியேற்றுமாறு எங்கள் ஆதரவாளர்கள் கூறினர். பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் தாக்கப்பட்டதாக மோடி கூறினார். ஆனால் உண்மையில் பாகிஸ்தான் தாக்கப்பட்டது. போரின் விதிகள் மாறிவிட்டன. இந்தத் தாக்குதலில் நம் அனைவருக்கும் பயங்கர சேதம் ஏற்பட்டது உண்மை.”
இந்த ஒப்புதல் வாக்குமூலம் இந்திய ராணுவத்தின் ஆப்ரேஷன் சிந்தூர் மிகுந்த வெற்றிகரமானதாக இருந்ததை மறைமுகமாக உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன்கள் அத்துமீறி நுழைந்த சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பின்னணியில் இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். “எதிரி எந்த அசைவும் எடுத்தாலும், உடனடியாகவும் கடுமையாகவும் தக்க பதிலடி கொடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு மற்றும் ராணுவத்தின் திறமையான செயல்பாடு எதிரிகளுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஆபரேஷன் சிந்தூர்! அடிவாங்குனது உண்மை தான்!! பொளந்து கட்டிய இந்தியா!! உண்மையை ஒப்புக்கொள்ளும் பாக்.,!