கேரள மாநில மீனவர் நலன் கலாச்சாரம் மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் ஷாஜி செறியனின் காரின் பின்பக்க டயர் திருவனந்தபுரம் அருகே வாமன புரம் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது திடீரென கழன்று ஓடியதால் விபத்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அமைச்சர் மற்றொரு வாகனத்தில் ஏறி சென்ற நிலையில் விபத்து குறித்து கேரள போலீசார் விசாரணை.
கேரள அமைச்சரவையில் மீனவர் நலன் கலாச்சாரம் மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சராக இருப்பவர் ஷாஜி செழியன் இவர் இன்று காலை ஆலப்புழாவில் இருந்து திருவனந்தபுரத்திற்கு காரில் வந்து கொண்டிருந்த போது திருவனந்தபுரம் வாமனாபுரம் வளைவு பகுதியில் கார் வந்துகொண்டிருந்த போது திடீரென அமைச்சரின் காரின் பின்பக்க டயர் திடீரென கழன்று ஓடி விபத்து ஏற்பட்டு உள்ளது.
உடனே கார் ஓட்டுநர் சுதாரித்து காரை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதோடு அமைச்சரும் காயங்கள் இன்றி தப்பித்து கொண்டார் இதனையடுத்து அவர் அங்கிருந்து மற்றொரு காரில் ஏறி திருவனந்தபுரம் தலைமை செயலகத்திற்கு சென்றார் இந்த நிலையில் விபத்து குறித்து கேரள போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மகாராஷ்டிரா: 800 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்..!! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்த பரிதாபம்..!!
இதையும் படிங்க: காலையிலேயே பயங்கரம்...!! நேருக்கு நேர் மோதிய 2 கார்கள்... ஐயப்ப பக்தர்கள் உட்பட 5 பேர் பலி...!