வாக்காளர் சிறப்பு திருத்தத்தை காங்கிரஸ் சொல்லிட்டு எதிர்கட்சிகள் எதிர்த்து வருகின்றன. ஏனெனில் ஏராளமான மக்களின் வாக்குரிமையை இது பறிப்பதாக அமையும் என்று கூறி இருக்கின்றனர். இருப்பினும் முதலில் பிஹாரில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடங்கப்பட்டு இந்தியா முழுவதும் நடைபெறும் என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
அதன்படி பிஹாரில் வாக்காளர் சிறப்பு திருத்தம் நடத்தப்பட்டு வருகிறது. 65 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பல்வேறு அரசியல் கட்சியினரும் தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்துள்ளனர்.
இந்த நிலையில் நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வரும் சூழ்நிலையில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. மக்களவை மற்றும் மாநிலங்களவையில் வாக்காளர் சிறப்பு திருத்தம் குறித்து விவாதிக்க கோரி ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கினர்.
இதையும் படிங்க: ஒரு எம்.பிக்கே பாதுகாப்பு இல்லை.. மற்ற பெண்களின் நிலைமை எப்படி இருக்கும்.. எம்.பி சுதா வேதனை..!!
மேலும் அவை நடவடிக்கைகள் தொடங்கியதும் அமலியில் ஈடுபடும் எதிர்க் கட்சியினர் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்திலும் ஈடுபடுகின்றனர். இருப்பினும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை.

இந்த நிலையில், வாக்காளர் சிறப்பு திருத்தம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரி வன்சுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார். வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர மதிப்பாய்வு இந்திய தேர்தல் ஆணையத்தால் முதலில் பீகாரில் மேற்கொள்ளப்படுகிறது.
மேலும் மேற்கு வங்கம், அசாம் மற்றும் பிற மாநிலங்களில் எடுத்துக்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். தற்போதைய கூட்டத்தொடரின் முதல் நாளிலிருந்தே எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இது குறித்து அவசர விவாதம் நடத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
எனவே, தனது சார்பிலும், ராஜ்யசபாவில் உள்ள எதிர்க்கட்சிகளின் சார்பிலும், கோடிக்கணக்கான வாக்காளர்களுக்கு, குறிப்பாக சமூகத்தின் நலிவடைந்த பிரிவினரைச் சேர்ந்தவர்களுக்கு மிகுந்த கவலையளிக்கும் இந்தப் பிரச்சினை குறித்து உடனடியாக ஒரு விவாதத்தை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கார்கே கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு: காங். மன்னிப்பு கேட்கணும்.. ஒரே போடாக போட்ட பாஜக..!