கால்பந்து ரசிகர்களின் கனவு நாயகன் லியோனல் மெஸ்ஸி இந்தியா வருகை தந்துள்ளார். 3 நாட்களுக்கு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தனது 70 அடி உயர உருவச் சிலையை கொல்கத்தாவில் மெஸ்ஸி காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இது கொல்கத்தாவின் விளையாட்டு வரலாற்றின் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்குகிறது.
முந்தைய கால்பந்து லெஜண்டுகள் போன்ற டியாகோ மாரடோனா, ரொனால்டின்ஹோ மற்றும் எமிலியானோ மார்டினெஸ் ஆகியோருக்கான சிலைகளைப் போலவே, மெஸ்ஸிக்கான சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் மெஸ்ஸி ரசிகர்களை சந்தித்தார். அப்போது மெஸ்ஸியை சரியாக பார்க்க முடியாததால் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் மீது ரசிகர்கள் ஆத்திரம் அடைந்தனர்.

மைதானத்தை விட்டு மெஸ்ஸி சென்றவுடன் கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் ரசிகர்கள் எடுத்து வீசி உள்ளனர். மைதானத்தில் இருந்த நாற்காலிகள் உள்ளிட்ட பொருட்களை வீசி ரசிகர்கள் ஆவேசத்தை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் மீது பாட்டில் உள்ள பொருட்களையும் வீசியுள்ளனர்.
இதையும் படிங்க: THE GOAT: கொல்கத்தாவில் பிரம்மாண்ட சிலை... லியோனல் மெஸ்ஸி திறந்து வைப்பு...!
கொல்கத்தாவில் மெஸ்ஸியை காண வந்த ரசிகர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். ரசிகர்கள் மைதானத்திற்குள் புகுந்து ரகலையில் ஈடுபட்டதால் தடியடி நடத்தப்பட்டுள்ளது. மெசி வருகைக்காக போடப்பட்டிருந்த மேடையையும் ரசிகர்கள் அடித்து நொறுக்கி இருந்தனர். ரகளை ஈடுபட்ட ரசிகர்களை தடியடி நடத்தி போலீசார் கலைத்துள்ளனர். விளையாட்டு மைதானத்திற்கு வந்த மெஸ்ஸி உடனடியாக கிளம்பிச் சென்று விட்டதால் அவரை பார்க்க முடியவில்லை என ஆதங்கத்தில் ரசிகர்கள் இவ்வாறு ஈடுபட்டுள்ளனர். இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
இதையும் படிங்க: THE GOAT: கொல்கத்தாவில் பிரம்மாண்ட சிலை... லியோனல் மெஸ்ஸி திறந்து வைப்பு...!