தொகுதி மறு வரையறை விஷயத்தில் திமுக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவது, இந்திய அரசியல் அமைப்பின் கூட்டாட்சி தத்துவத்தையும் தென்னிந்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தையும் பாதுகாக்கும் ஒரு நீண்டகால போராட்டமாக வெளிப்படுகிறது. இந்த எதிர்ப்பு 2026-ம் ஆண்டுக்குப் பிறகு நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதி மறு வரையறை செயல்முறையை மையமாகக் கொண்டது.
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுசீரமைக்கும் இந்த நடவடிக்கை, மக்கள் தொகை கட்டுப்பாட்டில் வெற்றி பெற்ற தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு பாதகமாக அமையும் என்று திமுக கருதுகிறது.தொகுதி மறு வரையறை என்பது அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி, ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகும் தொகுதிகளின் எல்லைகளையும் எண்ணிக்கையையும் மறுநிர்ணயம் செய்யும் செயலாகும். இதனை கடுமையாக திமுக எதிர்த்து வருகிறது.

இந்த நிலையில், மத்திய பாஜக அரசு கொண்டுவரும் தொகுதி வரையறையால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதையும் படிங்க: இந்தியா வளர்ச்சிக்கு பாடுபட்டதற்காக தண்டனையா..? நாளை கருப்புக்கொடி போராட்டம்...! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!
இந்த நிலையில், தலைக்கு மேல் தொங்கிய கத்தி கழுத்துக்கு வந்துவிட்டது என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். நாடு முழுக்க உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைத்து இந்த பேராபத்தை எதிர்கொள்வதற்கான வியூகங்கள் குறித்து கழக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசித்து இருப்பதாக கூறினார்.
தனிப்பட்ட மனிதர்கள், அரசியல் இயக்கங்களைவிட, மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதுதான் நமது தலையாய கடமை என்றும் எனவே, அனைத்து அரசியல் இயக்கங்களைச் சார்ந்த தோழர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனநாயகத்தைக் காக்க ஓரணியில் திரள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: தொகுதி மறு வரையறை..! முதல்வர் தலைமையில் திமுக எம்பிக்கள் அவசர ஆலோசனை கூட்டம்..!!