தொகுதி மறு வரையறை விஷயம் வீரியம் எடுத்துள்ளதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் நாளை கருப்பு குடி போராட்டம் நடைபெறும் என்ற தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். பொது இடங்களிலும் வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். இந்தியாவின் வளர்ச்சிக்கு பாடுபட்ட குற்றத்திற்காக தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களுக்கு தரும் தண்டனையா இது என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
தொகுதி மறு வரையறை விஷயத்தில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவது, இந்திய அரசியல் அமைப்பின் கூட்டாட்சி தத்துவத்தையும் தென்னிந்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தையும் பாதுகாக்கும் ஒரு நீண்டகால போராட்டமாக வெளிப்படுகிறது.

இந்த எதிர்ப்பு 2026-ம் ஆண்டுக்குப் பிறகு நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதி மறு வரையறை செயல்முறையை மையமாகக் கொண்டது. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுசீரமைக்கும் இந்த நடவடிக்கை, மக்கள் தொகை கட்டுப்பாட்டில் வெற்றி பெற்ற தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு பாதகமாக அமையும் என்று கருதுகின்றனர்.
இதையும் படிங்க: தொகுதி மறு வரையறை பிரச்சனை..! முதல்வர் ஸ்டாலின் திமுக எம்பிக்களுடன் அவசர ஆலோசனை..!!
இந்த நிலையில், நாளை கருப்பு கோடி போராட்டம் நடத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் வீடுகளிலும் பொது இடங்களிலும் நாளை கருப்பு குடி ஏற்றும் போராட்டம் நடக்கும் என்று கூறினார். இந்தியாவின் வளர்ச்சிக்காக பாடுபட்ட குற்றத்துக்காக தென் மாநிலங்களுக்கு தண்டனையா என்று தொகுதி மறு வரையறை விஷயத்தை சுட்டிக்காட்டி உள்ளார். மத்திய அரசு பின்வாங்கவில்லை என்றால் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் தெரிவித்துள்ளார். திமுக தலைவராக அனைத்துக்கும் சுயமரியாதை உள்ள தமிழனாக மீண்டும் எச்சரிக்கை விடுப்பதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தொகுதி மறு வரையறை..! முதல்வர் தலைமையில் திமுக எம்பிக்கள் அவசர ஆலோசனை கூட்டம்..!!