இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று மாலை காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அரசியல் சூழல் குறித்து அப்போது பேசுவார்கள் என்றும் இந்தியா கூட்டணியை இந்தியா முழுக்க வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

2026 சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளை திமுக முன்கூட்டியே துவங்க இருக்கிறது. இது தொடர்பாக காங்கிரஸ்-உடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தேர்தலில் 234 தொகுதிகளும் திமுக கூட்டணிக்குதான்.. அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாறுமாறு.!!

இந்த நிலையில் நாளை நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். மத்திய அரசு விடுத்த அழைப்பின் பேரில் டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கான நிதி தேவைகள் குறித்து நிதி ஆயோக் கூட்டத்தில் கோரிக்கைகளை முன்வைப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பேசாமல் கமலாலயத்துக்குள் அதிமுக ஆபிஸ் போட்டுக்குங்க..இபிஎஸ்ஸை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய ரகுபதி.!