கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக சென்றுள்ளார். நேற்றைய தினம் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா நினைவு வளைவை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்திருந்தார். இன்றைய தினம் கன்னியாகுமரியில் அமைய இருக்கும் மினி டைடல் பார்க் போன்றவற்றிற்கு அடிக்கல் நாட்டை வைத்ததுடன் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கண்கார்டியா பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கன்னியாகுமரியில் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு அடிக்கல் நாட்டை வைத்தார். மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது, குமரி மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். வளையாற்றிலிருந்து 28.20 கோடி ரூபாயில் கன்னியாகுமரி நகராட்சிக்கு குடிநீர் வழங்க புதிய திட்டம் தொடங்கப்படுவதாகவும் கூறினார். ஏவிஎம் கால்வாய் 1.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புணரவைக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: குமரியில் மினி டைடல் பார்க்..! சுமார் 600 பேருக்கு வேலைவாய்ப்பு... அடிக்கல் நாட்டைய முதல்வர் ஸ்டாலின்..!!
முளகுமூடு தேவாலயம் 2 கோடி ரூபாய் மதிப்பில் பழமை என்று அறிவித்தார். கன்னியாகுமரியில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். கன்னியாகுமரி மாவட்டம் கலியக்காவிலையில் 9 கோடி ரூபாய் செலவில் சாலைகள் மேம்படுத்தப்படும் என்று தெரிவித்தார். தமிழ்நாட்டிற்கு தேவையான அனைத்தையும் திறம்பட செய்யும் அரசாக திராவிட மாடல அரசு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கடைந்தெடுத்த ரவுடிகள்... கொலைகார கூடாரம் திமுக..!! கட்சிக்காரங்கள அடக்குங்க ஸ்டாலின்..! நயினார் விளாசல்..!!