முன்னாள் ராணுவ தலைவர் ஜெனரல் எம்.எம். நரவனேயின் நினைவுக்குறிப்பு புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட 2020 இந்தியா-சீனா எல்லை மோதல் விவரங்களை ராகுல் காந்தி மக்களவையில் எழுப்ப முயன்றபோது, அது தடை செய்யப்பட்டது. இதனால் எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷமிட்டு, காகிதங்களை கிழித்து சபாநாயகர் இருக்கை நோக்கி வீசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த அமளியால் அவை பலமுறை இடைநிறுத்தப்பட்டது. பின்னர், மதிய அமர்வில் சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நடைபெற்ற விவாதத்திற்குப் பிறகு, எதிர்க்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய பாஜக அரசு ஏன் பயப்படுகிறது என முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருந்தார்.

சபை உறுப்பினர்களுக்கு பதிலளிக்கவும் தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்கள் தொடர்பான விஷயங்களில் தெளிவுபடுத்தவும் அரசாங்கம் தயாராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். எட்டு எதிர்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்கத்தை தான் வன்மையாக கண்டிப்பதாகவும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை பேசுவதற்கான ஜனநாயக உரிமையை மீட்டெடுக்க உடனடியாக சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் ஓம் பிர்லாவுக்கு வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: களமாடும் திமுக... தேர்தல் அறிக்கை பணி தீவிரம்..! கனிமொழி தலைமையில் கருத்துக் கேட்பு கூட்டம்..!
ராகுல்காந்திக்கு பிரதமர் மோடி பயப்படுவதாக கூறிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார். பாகிஸ்தானுக்கும், ட்ரம்புக்கும் பயப்படாத மோடி ராகுல் காந்திக்கு பயப்படுவாரா என தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார். தொடர்ந்து தோல்விகளை சந்தித்து கொண்டிருக்கும் ராகுல் காந்திக்கு ஏன் பயப்பட வேண்டும் என கேள்வி எழுப்பி உள்ளார். அவை நடவடிக்களின் சட்ட விதிப்படி செய்யப்படும் முடிவுகளுக்கு ஏன் இப்படி பதறுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என்றும் கேட்டு உள்ளார்.
இதையும் படிங்க: எம்.பி.க்கள் சஸ்பெண்ட்..! மத்திய அரசுக்கு அவ்வளவு பயமா? முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்..!