பாகிஸ்தானிலிருந்து பலுசிஸ்தான் பிரிந்து புதிய நாடாக உருவாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணம் பலுசிஸ்தான். ஆனால், பாகிஸ்தான் அரசு தங்களை புறக்கணிப்பதாகக் கூறி பலூச் பகுதியை தனி நாடாக அறிவிக்க வலியுறுத்தி அங்குள்ள பலூச் விடுதலைப் படை நீண்ட காலமாகப் போராட்டம் நடத்தி வருகிறது. தற்போது 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை இந்தியா தொடங்கிய பிறகு, பலூச் மக்களும் தங்கள் பங்குக்கு பாகிஸ்தானுக்கு எதிராக தாக்குதலை நடத்தி வருகின்றனர். 12 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தை வெடி வைத்து தகர்த்தனர். பலூச் மாகாணத்தின் தலைநகர் குவெட்டாவை கைப்பற்றி விட்டதாகவும் பலூச் விடுதலைப் படை அறிவித்தது.

பலூச் பகுதியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் மிர் யார் பலூச் இதுபற்றி கூறுகையில், "பாகிஸ்தானில் இருந்து பலுசிஸ்தான் தனி நாடாகி விட்டது. இதற்கான அறிவிப்பு விரைவில் வரும். புதிய அரசிடம் நிர்வாகம் ஒப்படைக்கப்படும். இந்திய தலைநகர் டெல்லியில் பலுசிஸ்தான் தூதரகத்தை தொடங்க அனுமதிக்க வேண்டும். பலுசிஸ்தானுக்கு அமைதி படையை ஐ. நா. அனுப்ப வேண்டும். தனி நாடாக பலுசிஸ்தானை அங்கீகரிக்க வேண்டும்’’ என்று வெளிப்படையாகவே அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் மக்கள் தொகையில் 6 சதவீதம் மக்கள் பலூச் பகுதியில் உள்ளனர். ஆனால், நிலப்பரப்பு மட்டும் 45 சதவீதம். மிகப்பெரிய மாகாணமான பலூச்சில் தனிமங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இந்துக்களுக்கு பலுசிஸ்தானுக்கும் உள்ள தொடர்பை இங்குள்ள ஹிங்குலாஜ் அம்மன் கோயில்தான் உறுதி செய்கிறது. ஹிங்குலி என்பதற்கு சிந்தி மொழியில் முன் நெற்றி பொட்டு அல்லது குங்குமம் என்று அர்த்தம். இந்தக் கோயிலுக்கு இந்துக்கள் ஆண்டுதோறும் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர்.
இதையும் படிங்க: எல்லையில் இரவில் சண்டை நிறுத்தம்.. இயல்புக்கு திரும்பும் எல்லையோர மாநிலங்கள்..மக்கள் நிம்மதி பெருமூச்சு!

பாகிஸ்தான் அரசின் புறக்கணிப்பு, சீனாவின் தலையீடு, சீனக் கட்டுமானங்கள் போன்றவற்றால் விரக்தியில் உள்ள பலுசிஸ்தான் மக்கள், தங்களை தனி நாடாக அறிவிக்க கோரி போராடி வருகின்றனர். 1971இல் பாகிஸ்தானிலிருந்து வங்கதேசத்தை இந்தியா உருவாக்கியது போல பலூச் தனி நாடாக இந்தியாவின் உதவியையும் பலூச் மக்கள் எதிர்பார்க்கின்றனர். பலூச் மக்களின் கனவு நனவாகுமா? காலத்தின் கையில் விடை உள்ளது.
இதையும் படிங்க: அடங்காத பாகிஸ்தானால் பதற்றம்.. இந்திய எல்லை மாநிலங்களில் மீண்டும் பிளாக் அவுட்..!