கர்நாடக மாநிலத்தின் மஞ்சள்-சிவப்பு நிறக் கொடியை அதிகாரப்பூர்வ மாநிலக் கொடியாக அங்கீகரிப்பது குறித்து மாநில அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகவும், தனியார் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களிலும் கன்னடக் கொடியைப் பறக்கவிடுவதற்கான அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும் என்றும் கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநில உருவாக்க தினமான 'கன்னட ராஜ்யோத்சவா' தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வுகளில் பேசிய முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், மாநிலத்தின் மொழி, பண்பாடு மற்றும் அடையாளத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் அரசு உறுதியாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.

"கர்நாடக மாநிலத்தின் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறக் கொடிக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் வழங்குவது குறித்து அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. கன்னடக் கொடியை அரசு நிறுவனங்கள் மட்டுமின்றி, அனைத்துத் தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களிலும் பறக்கவிடுவதை ஊக்குவிக்கும் வகையில் விரைவில் முறையான உத்தரவு பிறப்பிக்கப்படும். மேலும் அரசு உதவிபெறும் நிறுவனங்களில் கன்னடக் கொடியைப் பறக்கவிடுவதைக் கட்டாயமாக்குவது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது.
இதையும் படிங்க: தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை நீக்க கோரி டெல்லியில் எதிர்க்கட்சிகள் மாபெரும் கண்டன பேரணி!
இது அரசு சார்ந்த முடிவு மட்டுமல்ல; ஒட்டுமொத்த கன்னட மக்களின் உரிமை மற்றும் அடையாளம் சார்ந்த விவகாரமாகும். இது தொடர்பான சட்ட நடைமுறைகள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து வரவிருக்கும் பெலகாவி குளிர்கால சட்டமன்றக் கூட்டத்தொடரில் விரிவாக விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலக் கொடிக்கு அதிகாரப்பூர்வ அந்தஸ்து வழங்குவது தொடர்பான சட்டப்பூர்வ விவாதம் நீண்ட காலமாக நீடித்து வரும் நிலையில், தனியார் நிறுவனங்களிலும் கொடியை ஏற்றுவது குறித்த அறிவிப்பு தேசிய அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: பிரிட்டனின் கடற்படை மற்றும் விமானப் படையை பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்தது ஈரான் அரசு!