நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில் ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பொருளாதார மந்தநிலை, வேலையின்மை, விவசாயிகள் பிரச்சினைகள், மற்றும் பணவீக்கம் போன்ற முக்கிய விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. சில மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், அரசுக்கு அழுத்தம் கொடுக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடரின் 2ஆம் நாள் அமர்வு இன்று தொடங்கியது. கூட்டத்தொடரின் போது பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சி உறுப்பினர்கள் திட்டமிட்டனர். குறிப்பாக காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதல் தொடர்பாக மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக விவரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

மழைக்கால கூட்டத்தோடு தொடங்கிய முதல் நாளிலேயே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இரண்டாம் நாள் அமர்வு தொடங்கிய நிலையில் மீண்டும் மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டனர். இதனால் நண்பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து, வாக்காளர் சிறப்பு திருத்தத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.
இதையும் படிங்க: மழைக்கால கூட்டத்தொடர் 2ஆம் நாள் அமர்வு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு...
இந்த நிலையில், வாக்காளர் சிறப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டது. நேற்று பகல் காம் தாக்குதல் சம்பவம் தொடர்பாக விவாதிக்க கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இரண்டாம் நாளான என்று வாக்காளர் சிறப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: #BREAKING: MODI SIR.. NO SIR.. நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் போராட்டம்..!