பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சமூகத்தின் வளர்ச்சியை பெருமளவு பாதிக்கிறது. பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியாத சூழலை உருவாக்குகிறது. அதிலும் கல்வி பயிலும் இடங்களில் நடக்கும் பாலியல் தொந்தரவுகள் பெற்றோரை அதிர்ச்சிக்கு ஆளாக்குகின்றன. பள்ளிகள், கல்லூரிகள் போன்ற இடங்களை நடக்கும் பாலியல் குற்றங்கள் பரபரப்பை ஏற்படுத்துகின்றன. தற்போது புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றும் ஒருவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துதாக எழுந்த குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் பேராசிரியராக பணியாற்றும் மாதவையா என்பவர் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதாக புகார் கூறப்பட்டுள்ளது. பாலியல் தொலை தொடர்பாக புகார் அளித்தும் பல்கலைத் கழகம் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனை கண்டித்து இரண்டாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்ட புதுவை பல்கலைக்கழகம் மாணவர்களை குண்டு கட்டாக போலீசார் கைது செய்தனர். நான்கு மாணவிகள் உட்பட 24 பேர் இதுவரை கைது செய்யப்பட்ட நிலையில் இதுவரை விடுவிக்கப்படவில்லை.

இந்த நிலையில், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் காரைக்கால் கிளையில் பயிலும் மாணவி ஒருவரின் ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பேராசிரியர் மாதவையா பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியுள்ளார். வாட்ஸ் அப்பில் ஆபாசமாக வீடியோக்கள் அனுப்ப வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாகவும் இல்லையென்றால் இன்டர்னல் மதிப்பினை கை வைத்து விடுவேன் என்று மிரட்டுவதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
இதையும் படிங்க: மானக்கேடு... போலீஸ்காரர்களே பெண்ணை சீரழித்த கொடூரம்... சீமான் ஆவேசம்..!
தனது பெற்றோருக்கு தெரிந்தால் படிப்பை நிறுத்தி விடுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
இதையும் படிங்க: வரதட்சணை கொடுமை! மருமகளின் காதை கடித்து குதறிய மாமியாரின் வெறிச்செயல்